ஏபிபி நாடு வாசகர்களுக்கு இனிய பொங்கல் மற்றும் தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.


நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் பிரபலமான காமெடிகளில் வா.. செத்து செத்து விளையாடலாம் என்ற காமெடி மிகவும் பிரபலம். அந்த காமெடியில் வடிவேலுவை பாடாய்படுத்தும் கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமடைந்தவர் நடிகர் முத்துக்காளை. அவர் தனியார் யூ டியூப் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,




“ எனக்கு மட்டுமல்ல 99.99 சதவீதம் நபர்கள் சினிமாவில் ஏதாவது ஒரு துறையில் வர வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அந்த மாதிரி 14, 15 வயதிலே சினிமாவில் நடிக்க வேண்டும் என்று எனக்கும் ஆசை வந்தது. ஸ்டண்ட் நடிகராக வேண்டும் என்று ஆசை வந்தது. ஸ்டண்ட் எனக்கு ஈசியான தொழிலும் கூட. ஸ்டண்ட் மாஸ்டராக வேண்டும் என்று ஆர்வம் வந்தது.


6ம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டேன். வேலைக்கு போக வேண்டும் என்ற கட்டாயம். மளிகை கடையில் ரூபாய் 30க்கு வேலைக்கு சேர்ந்தேன். கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கினேன். சிலம்பம், ஜிம்னாஸ்டிக் கற்றுக்கொண்டேன். பின்னர், நானும் சினிமாவில் பெரிய ஆளாகிவிடலாம் என்று சென்னைக்கு வந்து இறங்குனேன். இறங்குன பிறகுதான் தெரிந்தது? சினிமா ஒரு கடலென்று தெரிந்தது. ஸ்டூடியோவிற்குள் நடிகர்களை சந்திக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது.




ஏ.வி.எம். ஸ்டூடியோவில் ஏதாவது வேலை கிடைக்குமா? என்று கேட்டேன். கார்பெண்டர் வேலை உள்ளது என்றனர். எப்படியாவது ஏ.வி.எம். ஸ்டூடியோவிற்குள் செல்ல வேண்டும் என்று நினைத்தேன். அப்போது, ஏ.வி.எம். ஸ்டூடியோவிற்குள் செல்வது ஒரு சாதனை செய்வது போல.  தினசரி ரூபாய் 13 என்ற சம்பளத்திற்கு வேலைக்கு சென்றேன். காலை 8.30 மணியில் இருந்து மாலை 5.30 மணி வரை வேலை. ஸ்டண்ட் ஆர்டிஸ்ட் ஆவதே எனது ஆசை, லட்சியம், கனவு ஆகும்.


விஜய் நடித்த காதலுக்கு மரியாதை படத்தில் கடவுள் புண்ணியத்தில் ஒரு வாய்ப்பு கிடைத்தது. எனது மாஸ்டர் ஸ்டண்ட் சிவாவிற்கு சண்டை உதவியாளராக ஆள் தேவைப்பட்டது. ஒரு நண்பர் மூலமாக வாய்ப்பு கிடைத்தது. அப்போது மூலமாக டேக் ஆப் ஆகிவிட்டது. என்னை ஒரு நடிகராக வெளியில் தெரிகிறது என்றால், அதற்கு இயக்குனர் ராஜ்குமார்தான் காரணம்.




நடிக்க வாய்ப்பு தேடி வாய்ப்பு தேடி அலைந்தேன். சென்னையில் உள்ள சந்து, பொந்து எல்லாம் அலைந்தேன். ஒருத்தரும் வாய்ப்பு தரவில்லை. அவர்தான் பொன்மனத்தில் என்னை நடிகனாக்கினார். படம் எடுத்து 10 வருடங்கள் ஆகிய இயக்குனரிடம் எல்லாம் வாய்ப்பு தேடிச்சென்றுள்ளேன். இந்த தெரு பக்கம் வந்தால் அடிப்பேன் என்று சொல்லி எல்லாம் அனுப்பியுள்ளனர்.


வடிவேலு, கவுண்டமணி இருவரும் இரண்டு ஜாம்பவான்கள். விவேக் சாருடன் 35 படங்கள் நடித்துள்ளேன். ஏனென்றால், நான் ஜோக்கர். எங்கு வேண்டுமானாலும் சேர்ந்து கொள்வேன். அவர்கள் எல்லாம் ரம்மி. என்னைப் பொறுத்தவரை கொடுத்த வேலையை அழகாக செய்துவிட்டு ஓரமாக சென்றுவிட வேண்டும். எனக்கு இந்த குரூப், அந்த குரூப் என்று இருப்பது பிடிக்காது. நான் அப்படி பிரிந்தும் இருக்க மாட்டேன். “


இவ்வாறு அவர் பேசினார்.  


அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நேரலை இதோ...


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண