காலையில் சீக்கிரம் எழுந்து வகுப்பிற்கு செல்வதில் பலருக்கு பிரச்சனை இருக்கலாம். காலை தூக்கத்தை விரும்புவோர், அதிகரித்துவரும் இந்த காலத்தில், பொதுவாகவே யாருக்கும் சீக்கிரம் எழுவது பிடிப்பதில்லை. அதிலும் காலையில் எழுந்து பள்ளிக்கூடமோ கல்லூரியோ சென்று காலை 7 மணி வகுப்புகளில் படங்கள் கவனிக்கவேண்டும் என்றால் யாருக்கு தான் தூக்கம் வராது? 9 மணிவரை கட்டிலில், மெத்தையில் நன்றாக போர்த்திக்கொண்டு தூங்கலாம் என்றால் எல்லோருக்குமே சோம்பல் முறித்து கொட்டாவி விட ஆசையாகத்தான் இருக்கும். ஆனால் கல்வி கற்கும் இடங்களில் அதற்கென விதிகள் உண்டு. அந்தந்த நேரத்திற்கு வர வேண்டும் என்றால் கண்டிப்பாக வர வேண்டும்தான். ஆனால் அதற்கும் ஏதாவது புதிய மாற்று கண்டுதானே ஆகவேண்டும்.



Watch Video: அப்புறம் என்ன அதானே... இந்த ஆண்டும் ‛வாத்தி கம்மிங்’ ஆட்டம் போட்ட தமிழ்நாடு அணி!


அப்படி யோசித்த ஒருவர், க்ளாஸ் ரூமை படுக்கைக்கு கொண்டு வர முடியாது என்பதால் படுக்கையை க்ளாஸ் ரூமிற்கு கொண்டு சென்றுள்ளார். அந்த மாணவர் சாவகாசமாக தனது மெத்தையை பல்கலைக்கழகத்திற்குள் எடுத்து வந்து மேஜையில் போட்டு 9 மணி வகுப்பில் இருந்துகொண்டே பெட்டிலும் இருக்கிறார். தூங்குவதற்காக பெட்டில் தூங்குபவர் எல்லோரும் வருவதற்கு முன்னதாகவே வகுப்பிப் இருக்கிறார். இந்த வீடியோவை வெளியிட்ட டிக்டாக் பயனர் மக்தா @kapciaks என்னும் அக்கவுண்டில் இருந்து வெளியிட்டு இருக்கிறார். வெளியிட்ட அவர் அதற்கு கீழ், "9 மணிக்கு வகுப்பு இருக்கும்போது, அப்போதும் நமக்கு தூங்கவும் வேண்டும் என்றால்" என்று எழுதி இருக்கிறார்.



Watch Video | ரயில் வரும்போது ரீல்ஸ்! அடித்துத் தூக்கிய ரயில் : பதைபதைக்க வைக்கும் வீடியோ!


இந்த பதிவுடன் அவர் இரண்டு ஹேஷ்டேக்களையும் இணைந்துள்ளார். அவை #uni மற்றும் #lboro ஆகும். முதல் ஹேஷ்டேக் யூனிவர்சிட்டி என்பதையும் இரண்டாவது லோஃப்போரோ என்பதையும் குறிக்கிறது. அதை வைத்துப் பார்க்கும்போது இந்த நிகழ்வு லெய்ஸெஸ்டர்ஷைரில் உள்ள லோஃப்போரோ யூனிவர்சிட்டியில் நடந்திருக்கலாம். இந்த வீடியோ காட்டுவது என்னவென்றால், ஒரு பெயர் அறியாத மாணவி ஒருவர் ஒரு சூப்பர் மார்க்கெட் ட்ராலி வண்டியில் தனது மெத்தை, போர்வை, தலையணை, ஆகிய தனக்கு தூங்க தேவையானவற்றை எடுத்து மிகவும் கம்பீரமாக வருகிறார். அவர் வெள்ளை நிற இரவு உடைகள் அணிந்துள்ளார். அதனுடன் நேராக கல்லூரி வகுப்பறைக்குள் நுழைந்து உள்ளே செல்கிறார். சென்று மெத்தையை விரித்துப்படுக்கிறார்.