உலக நாயகன் கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் கீழ் உருவாகவுள்ள 54 வது படத்தின் அப்டேட் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்று மாலை 6.30க்கு மணிக்கு வெளியாகும் என்ற அறிவிப்பை பிளட் அண்ட் பேட்டில் என்ற கேப்ஷனுடன் போஸ்டர் மூலம் என அறிவிப்பு வெளியானது. அதனை தொடர்ந்து தற்போது படத்தின் அப்டேட்டை வெளியிட்டுள்ளது படக்குழு.
வெளியான அப்டேட் :
ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் 54வது படத்தை இயக்குகிறார் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குனர் தேசிங்கு பெரியசாமி. கமல்ஹாசன் தயாரிப்பில் ஹீரோவாகிறார் நடிகர் சிலம்பரசன். ஓபிலி.என்.கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள 'பத்து தல' திரைப்படம் மார்ச் 30ம் தேதி வெளியாக உள்ள நிலையில் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர் STR ரசிகர்கள். இது சிலம்பரசன் நடிக்கும் 48 வது திரைப்படமாகும்.
சூப்பர் ஸ்டாருக்கு எழுதிய கதையில் சிம்பு :
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி ஒரு கதையை கூறியுள்ளார். ஆனால் சில காரணங்கள் சிம்பு அந்த திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாக கூறப்படுகிறது. தற்போது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தின் கதை ரஜினிகாந்திடம் கூறப்பட்டதா அல்லது இது வேறு ஒரு கதையாக இருக்குமா என திரை ரசிகர்கள் யூகித்து வருகிறார்கள்.
எகிறும் எதிர்பார்ப்பு:
ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் அப்டேட்டுக்காக நேற்று மாலை முதல் எதிர்பார்ப்பு உச்சத்தில் இருந்து வந்தது. பிளட் அண்ட் பேட்டில் என்ற கேப்ஷனை பார்த்த ரசிகர்கள் இது நிச்சயமாக ஒரு ஆக்ஷன் திரைப்படமாக தான் இருக்கும் என யுகங்களை தெரிவித்து வருகிறார்கள். கமல் - சிம்பு காம்போவில் உருவாகும் இப்படம் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள. படம் குறித்த மற்ற அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.