ஸ்டார், தங்கலான் , உள்ளிட்ட சில படங்கள் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் தேதியை எதிர்பார்த்து காத்திருக்கின்றன


2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல்


வரும் ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெறு உள்ளது. தேர்தல் நடைபெறும் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. இப்படியான நிலையில் ஏப்ரல் மாதம் வெளியாக திட்டமிடப்பட்டிருந்த படங்கள் தங்களது ரிலீஸ் தேதியை உறுதிசெய்யாமல் காத்திருக்கின்றன. 


தங்கலான்




பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம்  நடித்துள்ள படம் தங்கலான். மாளவிகா மோகனன், பார்வதி திருவொத்து, பசுபதி உள்ளிட்டவர்கள் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. தங்கலான் படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப் பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தேர்தல் காரணத்தினால் தங்கலான் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு இன்னும் அறிவிக்கப் படாமல் இருக்கிறது.


ஸ்டார்




ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மெண்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ஸ்டார். இப்படத்தில் லால், அதிதி போஹாங்கர், கீதா கைலாசம், ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையடைந்ததைத் தொடர்ந்து இப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியிடப் பட்டது. வரும் ஏப்ரம் மாதம் இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தேர்தல் நாள் அறிவித்தப் பின் ரிலீஸ் தேதியை உறுதிபடுத்தாமல் கார்த்திருப்பதாகவும் கூறப்படுகிறது.


வணங்கான்




பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து வந்த படம் வணங்கான். சூர்யாவுக்கும் பாலாவுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட இந்தப் படத்தில் இருந்து விலகினார் சூர்யா. தற்போது நடிகர் அருண் விஜய்  நடித்து முடித்துள்ள திரைப்படம் வணங்கான். பாலாவின் தயரிப்பு நிறுவனமான பி ஸ்டுடியோஸ் மற்றும் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ்  இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில், ரோஷினி பிரகாஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். மிஷ்கின், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி.பிரகாஷ் இப்படத்துக்கு இசையமைத்துள்ள நிலையில், வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. வரும் ஏப்ரல் மாதம் இப்படம் வெளியாக இருக்கிறது.


ரத்னம்




மார்க் ஆண்டனி படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஷால் தற்போது இயக்குநர் ஹரி இயக்கும் 'ரத்னம்' படத்தில் நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் பிரியா பவானி ஷங்கர், ராமச்சந்திர ராஜு, சமுத்திரக்கனி, கௌதம் மேனன், யோகி பாபு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.  படப்பிடிப்பு முடிவடைந்து ஏப்ரல் மாதம் ரிலீஸ் தேதிக்காக காத்திருக்கிறது விஷாலில் ரத்னம் படம்.




மேலும் படிக்க : Manjummel Boys Review: குணா குகையில் நடந்த உண்மை சம்பவம்.. மஞ்சும்மல் பாய்ஸ் பட விமர்சனம்!