யுவன் சங்கர் ராஜாவின்பிறந்த நாளை ஒட்டி கவின் நடிக்கும் ஸ்டார் படத்தின் ஸ்பெஷல் புரோமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழும் யுவன் ஷங்கர் ராஜா இன்று தனது 44வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தீனா, பில்லா, மங்காத்தா, ராம், சண்டக்கோழி, புதுப்பேட்டை, மன்மதன், வல்லவன், பருத்தி வீரன், தாமிரபரணி, அஞ்சான் உள்ளிட்ட பல படங்களின் இசை அமைத்து ரசிகர்களை உடல் சிலிர்க்க வைத்தவர் யுவன் ஷங்கர் ராஜா. 150படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ள இவர், திரைப்பட பாடல்களையும் பாடியுள்ளார்.
இந்த நிலையில் யுவன் சங்கர் ராஜாவின் பிறந்த நாளை ஒட்டி கவின் நடிக்கும் ஸ்டார் படத்தின் ஸ்பெஷல் புரோமா வெளியாகியுள்ளது. நித்தம் ஒரு வானம் படத்தை தயாரித்த ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனமும், சினி சித்ரா நிறுவனம் சார்பில் உருவாகும் ஸ்டார் படத்தை இளன் இயக்குகிறார். ‘பியார் பிரேமா காதல்’ படங்களை இயக்கி இருந்த இவர் ஸ்டார் படத்தில் இணைந்துள்ளார். கவின் ஹீரோவாக நடிக்க இரு ஹோரோயின்கள் கமிட் ஆகியுள்ளனர்.
படத்துக்கு எழில் அரசு ஒளிப்பதிவு செய்ய, யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். மும்பை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் யுவன் சங்கர் ராஜாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறும் விதமாக பாரதியையும், கவிதையுமான வீடியோ பார்ப்போரின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. அமைதியாக செல்லும். முண்டாசு கட்டிய பாரதியுடன் தொடங்கும் வீடியோவில் அமைதியாக நடந்து செல்லும் கவினும், அதற்கு பின்னணி குரலாக ‘உன் கண்ணிவெடிகள் யாவும் என் பாதத்தை பதம் பார்க்கலாம். என் எண்ணங்கள் வெடிக்குமே... என் செய்வாய் தோழனே’, ‘நூறாயிரம் பாதங்கள் எனை மிதித்து நின்றாலும் ஓராயிரம் யானை பலம் கொண்டு உதறி எழுந்து நிற்பேனே’ என ஒலிக்கும் குரல் வீடியோவை பார்க்க ஈர்க்கிறது.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான கவின், டாடா படத்தில் நடித்ததன் மூலம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றார். ஏற்கனவே காதல் சர்ச்சையை சிக்கிய கவின் தனது நீண்டகால தோழியை திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியானது. அதன்படி, கடந்த 20-ஆம் தேதி தனது காதலியான மோனிகாவை இரு வீட்டார் சம்மதத்துடன் கவின் திருமணம் செய்தார்.
மேலும் படிக்க: Chandramukhi 2: சந்திரமுகி 2 படத்தில் ரஜினி நடிக்காததற்கு காரணம் ஷங்கரா? - இயக்குநர் வாசு சொன்ன அதிர்ச்சி தகவல்..!