சந்திரமுகி 2 படத்தில் ரஜினி ஏன் நடிக்கவில்லை என்பதை நேர்காணல் ஒன்றில் இயக்குநர் பி.வாசு தெரிவித்துள்ளார். 


சந்திரமுகி படம்


கடந்த 2005 ஆம் ஆண்டு இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த படம் தான் தமிழ் சினிமா வரலாற்றில் அதிக நாட்கள் ஓடிய படம் என்ற பெருமையை இன்றளவும் கொண்டுள்ளது. சந்திரமுகி படத்தில்  ரஜினிகாந்த், பிரபு, நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு, நாசர், சோனுசூட், வினீத், மாளவிகா, செம்மீன் ஷீலா என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.  சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நடிகர் பிரபு இப்படத்தை தயாரித்திருந்தார். வித்யாசாகர் இசையில் உருவான பாடல்களும் ரசிகர்களின் பேவரைட் ஆக அமைந்தது.


சந்திரமுகி 2 படம்


இப்படியான நிலையில் சந்திரமுகி 2 படத்தை தயாரிக்க உள்ளதாக லைகா நிறுவனம் அறிவித்து படமும் ரிலீசுக்கு தயாராக உள்ளது. செப்டம்பர் 15 ஆம் தேதி ரிலீசாகவுள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் நடைபெற்றது. ஆனால் ரசிகர்கள் ரஜினி, ஜோதிகா இல்லாமல சந்திரமுகி 2 ஆம் பாகம் எப்படி இருக்கும் என கேள்வியெழுப்பி வருகின்றனர். இதனிடையே இயக்குநர் வாசு நேர்காணல் ஒன்றில் சந்திரமுகி 2 படத்தில் ரஜினி ஏன் நடிக்கவில்லை என்பதை  தெரிவித்துள்ளார். 


ரஜினி நடிக்காததன் காரணம் 


சந்திரமுகி 2 படத்திற்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷனாக இருந்தது லதா ரஜினிகாந்த் தான். அதுவும் 2006 ஆம் ஆண்டில் வேட்டையன் ராஜா கேரக்டரை டெவலப் பண்ண சொல்லியிருந்தார். நானும் கதை எல்லாம் பண்ணிட்டு ரஜினியிடம் சொன்னேன். அவர் முதலில் கன்னடத்தில் ஆப்தமித்ரா மாதிரி பண்ணிடுங்க. அதை பார்த்துட்டு தமிழில் வருவோம் என சொன்னார். நானும் விஷ்ணுவை வைத்து படம் எடுத்தேன். அங்கே சூப்பர் ஹிட்டாயிடுச்சி. அது ஆப்தரக்‌ஷகா என்ற பெயரில் வெளியாகியிருந்தது. 


உடனே ரஜினியுடன் எல்லாம் பேசி முடிவு பண்ணிட்டோம். ஆனால் அப்போது அவரோ ஷங்கர் இயக்கத்தில் எந்திரன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஒரு வருடங்களுக்கு மேல் டேட் கொடுத்திருந்தார். இதுபோன்ற 2, 3 காரணங்கள் சந்திரமுகி 2 தொடங்கப்படாமல் இருக்க காரணமாக அமைந்தது. இல்லையென்றால் 13 வருடங்களுக்கு முன்பே இந்த படம் ‘வேட்டையன் ராஜா’ ஆக வந்திருக்கும். அதன்பிறகு குலேசன் படம் எடுக்கப்பட்டது.


ரஜினி விருப்பப்பட்டு தானாகவே 12 நாட்கள் நடித்து கொடுத்தார். படம் முழுக்க ரஜினி தான் இருக்கிறார் என பப்ளிசிட்டி பண்ணியது அவருக்கு வருத்தத்தை உண்டு பண்ணியது. அப்போது படம் சரியாக போகவில்லை. ஆனால் இப்போது குசேலன் படத்தை கொண்டாடுகிறார்கள்” என இயக்குநர் பி.வாசு கூறியுள்ளார்.