Actor Yogibabu: ‘ஹாலிவுட் போங்க அட்லீ.. நானும் வருவேன்ல’ .. அடுத்த படத்துக்கு சான்ஸ் கேட்ட யோகிபாபு..!
ஜவான் படத்தின் ப்ரி ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் யோகிபாபு, இயக்குநர் அட்லீ ஹாலிவுட்டிலும் படங்கள் இயக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

ஜவான் படத்தின் ப்ரி ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் யோகிபாபு, இயக்குநர் அட்லீ ஹாலிவுட்டிலும் படங்கள் இயக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இந்தியில் எண்ட்ரி கொடுக்கும் அட்லீ
தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் படங்களை இயக்கி முன்னணி இயக்குநராக உருவான அட்லீ, இந்தி திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். முதல் படமே பாலிவுட் பாட்ஷா என்றழைக்கப்படும் நடிகர் ஷாரூக்கானை வைத்து எடுத்துள்ளார். ரெட் சில்லி நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ‘ஜவான்’ என பெயரிடப்பட்டுள்ளது.
Just In




இந்த படத்தில் நயன்தாரா ஹீரோயினாகவும், வில்லனாக விஜய் சேதிபதியும் நடித்துள்ளனர். மேலும் பிரியாமணி, யோகி பாபு என ஏகப்பட்ட தமிழ் சினிமா நட்சத்திரங்களும் ஜவான் படத்தில் இணைந்துள்ளனர். இப்படத்தின் மூலம் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். ஜவான் படம் செப்டம்பர் 7ம் தேதி திரைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதுவரை இப்படத்தில் இருந்து 3 பாடல்களும், ட்ரெய்லர் ஒன்றும் வெளியாகி இருந்தது. மேலும் அவ்வப்போது ஜவான் படத்தின் அப்டேட்டுகளும் வெளியாகி வருகிறது.
பிரமாண்டமாக நடந்த விழா
இதனிடையே சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் ‘ஜவான்’ படத்தின் ப்ரி ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஷாருக்கான், இயக்குநர் அட்லி, விஜய் சேதுபதி, யோகிபாபு உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் அட்லீ, ‘ஜவான்’ படம் உருவாக காரணமே என்னோட அண்ணன் விஜய் தான் என தெரிவித்தார். அவர் ஜவான்’ படம் உருவாக காரணமே என்னோட அண்ணன் விஜய் தான் என்னை ஊக்கப்படுத்தினார் என தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து பேசிய நடிகர் யோகிபாபு, ‘தமிழில் தன்னுடைய ஆளுமையை நிரூபித்த இயக்குநர் அட்லீ, இப்போது பாலிவுட்டிலும் தனது திறமையை நிரூபித்துள்ளார். விரைவில் அவர் ஹாலிவுட்டிலும் கலக்குவார் என்று பாராட்டினார். இதையடுத்து யோகிபாபுவிடம் எப்போது ஹாலிவுட்டில் எண்ட்ரீ குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், ‘அட்லீ ஹாலிவுட் போனால் தன்னையும் அழைத்துக் கொள்வார்’ என்று குறிப்பிட்டார்.
அங்கு அர்னால்டே நடித்தாலும் நம்முடைய கலைஞர்களை ஹாலிவுட்டில் களமிறக்குவார் அட்லீ. யோகிபாபுவின் பேச்சை அட்லீ ரசித்து கேட்டார்.