விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். எப்போது புது விதமான கேம் ஷோக்காளல் ரசிகர்களை ஈர்ப்பதில் வல்லவர்கள். பிக் பாஸ் தொடங்கி குக் வித் கோமாளி, சூப்பர் சிங்கர், நீயா நானா உள்ளிட்ட ஏகப்பட்ட வெற்றிப் பெற்ற நிகழ்ச்சிகள் வெளியாகிறது. ரசிகர்களை எப்படி கவர்வது என்பதில் அதிக கவனம் செலுத்தி, அதற்காகவே தனியாக ஒரு குழுவை வைத்து உள்ளனர்.
அந்த வகையில் தற்போது புதிதாகத் தொடங்க உள்ள நிகழ்ச்சி ஸ்டார் கிட்ஸ். இதில் விஜய் தொலைக்காட்சியில் இருக்கும் பிரபலங்கள் தங்களது குழந்தைகளுடன் கலந்து கொள்கின்றனர்.
அதில் அறந்தாங்கி நிஷா, போஸ் வெங்கட் மனைவி சோனியா, அறந்தாங்கி நிஷா, ராமர், நீபா, மதுரை முத்து, செந்தில் ராஜலட்சுமி உள்ளிட்டோ குழந்தைகளுடன் கலந்து கொள்கின்றனர். நிகழ்ச்சியை மகேஷ் தொகுத்து வழங்குகிறார். போட்டியின் நடுவர்களாக தீபிகா, ப்ரியாங்கா, மணிமேகலை ஆகியோர் உள்ளனர்.
பிரபலங்கள் தாங்கள் படப்பிடிப்பிற்கு வருவதால், பிள்ளைகளை எவ்வாறு மிஸ் செய்கின்றனர், எப்படி எல்லாம் அவர்களுடன் நேரத்தைச் செலவு செய்ய முடியாமல், தவிர்க்கின்றனர் என்பது குறித்து வெளியிட்டு வருகின்றனர். பொதுவாக பிரபலங்கள் என்றால், பணம் சம்பாதிப்பார்கள், பணத்தை வைத்து மிகிழ்ச்சியாக வாழ்பார்கள் என்ற மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் எங்களுக்குளும் சோகம் இருக்கிறது என இந்த நிகழ்ச்சி மூலம் பிரபல்ங்கள் வெளிக்காட்டியுள்ளனர்.
இது குறித்து ப்ரோமோ வீடியோவை விஜய் தொலைக்காட்சி தங்களது யூடியூப் தளத்தில் வெளியிட்டு வருகின்றனர். அதில், அரந்தாங்கி நிஷா, ஷூட்டங் முடித்து நான் வீட்டிற்குச் சென்றவுடன், என் மகளை தூக்கி ஆசையாகக் கொஞ்சுவதற்கு கூப்பிடுவேன். ஆனால் அவள் என்னிடம் வர மாட்டாள் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.
அவரை தொடர்ந்து பேசிய சோனியா, எனக்கு பெண் பிள்ளை வேண்டும் என்று ஆசை பட்டேன். ஆனால் அவளை என்னால் வளர்க்க முடியவில்லை. அவள் தான் என்னை வளர்கிறாள் என்றார். அதேபோல் செந்தில் ராஜலட்சுமி, “நான் சேலை கட்டினாலே என் பிள்ளை என்னிடம் எங்கே அம்மா எங்களை விட்டு போறிங்க’னு கேப்பாங்க” என மிகவும் வருத்தத்துடன் பேசினார்.
இதனைக் கேட்ட மகேஷ் வாழ்க்கையில் நிறைய மிஸ் செய்கிறேன்” என கண்ணீர் மல்க பேசிய படி புரோமோ முடிந்துள்ளது. விரைவில் இந்த நிகழ்ச்சி தொடங்கும் தேதி, ஒளிபரப்பாகும் நேரம் குறித்த அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.