ஆர்எஸ்எஸ் பற்றி அப்பா எழுதிய ஸ்க்ரிப்டை வாசித்து கண் கலங்கிவிட்டேன் என்று கூறுகிறார் பிரம்மாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி. தி நியூயார்க்கர் என்ற பத்திரிகைக்கு ராஜமெளலி அளித்துள்ள பேட்டியில் தான் இவ்வாறு கூறியுள்ளார்.


எஸ்.எஸ்.ராஜமெளலியின் தந்தை விஜயேந்திர பிரசாத். இவர் மிகப்பிரபலமான கதாசிரியர். இவர் ஆர்ஆர்ஆர், மகதீரா, மணிகர்ணிகா, மெர்சல், சல்மான் கானின் பஜ்ரங்கி பாய்ஜான் ஆகிய வெற்றிப் படங்களுக்கு கதாசிரியராக இருந்திருக்கிறார். அதுதவிர தற்போது சீதா: அபராஜித அயோத்யா மற்றும் பவன் புத்ராவின் உருவம் என்ற படத்திற்கு கதாசிரியராக பணியாற்றி வருகிறார்.


இந்நிலையில் விஜயேந்திர பிரசாத் தற்போது ஆர்எஸ்எஸ் பற்றிய ஸ்க்ரிப்ட் செய்து வருகிறார். இது குறித்து ராஜமெளலி கூறுகையில், "எனக்கு தனிப்பட்ட முறையில் ஆர்.எஸ்.எஸ் பற்றி ஏதும் தெரியாது. ஆனால் அந்த அமைப்பைப் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். தவிர அந்த இயக்கம் எப்படி உருவாக்கப்பட்டது. அவர்களின் நம்பிக்கைகள், சித்தாந்தங்கள் என்ன? அவர்கள் எப்படி வளர்ந்தார்கள் என்று தெரியாது. என் தந்தையின் ஸ்க்ரிப்ட்டின் வாயிலாக அதை நான் தெரிந்து கொண்டேன். அது வாசிப்பதற்கே மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. நான் அந்த ஸ்க்ரிப்ட்டை வாசிக்கும் போது நிறைய இடங்களில் கண்ணீர் சிந்தினேன். ஆனால் நான் அதை படமாக இயக்குவேனா என்று கேட்டால் அது இப்போதைக்கு எனக்குத் தெரியாது என்றுதான் சொல்வேன். அந்த ஸ்க்ரிப்ட் உணர்வுப்பூர்வமாக உள்ளது. மிக மிக நன்றாக இருக்கிறது. ஆனால் இது சமூகத்தினை எவ்வாறு பிரதிபலிக்கிறது என்று இந்த ஆரம்ப நிலையில் தெரியவில்லை. அதனால் தான் என்னால் அது படமாக இயக்குவேனா என்று சொல்ல முடியவில்லை.


காரணம் அந்த ஸ்க்ரிப்டை ஒருவேளை என் தந்தை வேறு யாருக்காவது எழுதுகிறாரா என்று தெரியவில்லை. வேறு தயாரிப்பாளருக்காக எழுதிகிறாரா என்றும் தெரியவில்லை. அதனால் தான் என்னிடம் இப்போதைக்கு உறுதியான தகவல் இல்லை என்று கூறுகிறேன். ஆனால் ஒரு வேளை என்னை இயக்கும்படி பணித்தால் நான் அதைப் பெருமையாக, கவுரமாக கருதுவேன். காரணம் அது அவ்வளவு அழகான மனிதம் நிறைந்த உணர்வுப்பூர்வமான டிராமா. இருப்பினும் திரும்பவும் சொல்கிறேன். அது என்ன மாதிரியான தாக்கத்தை சமூகத்தில் ஏற்படுத்தும் என்பது எனக்கு இப்போது உறுதியாகத் தெரியவில்லை. அது நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துமா இல்லை எதிர்மறையான விளைவை ஏற்படுத்துமா என்று தெரியவில்லை. 


 ஆர்ஆர்ஆர் திரைப்படத்திற்கு சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதுக்கான தெரிவுப் பட்டியல் ஏமாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாத எழுத்தாளர் மற்றும் ராஜமௌலியின் தந்தையான விஜயேந்திர பிரசாத் அவரின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். 2022ம் ஆண்டு முழுவதும் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தை கொண்டாடி இப்படம் ஆஸ்கார் விருதை நிச்சயமாக வெல்லும் என பல உரையாடல்களில் ஊக்குவிக்க மிகுந்த நம்பிக்கையுடன் இருந்த எனக்கு லாஸ்ட் ஃபிலிம் ஷோ (செல்லோ ஷோ) ஆஸ்கார் விருதுக்கு இந்தியாவின் அதிகாரபூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டது மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்தது” என மிகுந்த மனவேதனையுடன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார் ஆர்ஆர்ஆர் படத்தின் எழுத்தாளர் விஜயேந்திர பிரசாத்.