மகா சிவராத்திரி என்பது மக மாதத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு சனிக்கிழமை மகா சிவராத்திரி வந்துள்ளது. இது இந்து புராணத்தின்படி மிக முக்கியமான சங்கமமாகக் கருதப்படுகிறது. நாடு முழுவதும் இன்றைய தினம் சிவ பெருமானை மக்கள் வழிபடுவர். விரதம் இருந்து பூஜைகளை மேற்கொள்வர். இந்த நன்நாளில் 12 ஜோதிர்லிங்கத்தை தரிசித்தால் பெரும் பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
சோம்நாத்:
குஜராத்தின் மேற்குக் கரையில் அமைந்திருக்கிறது இந்த ஜோதிர்லிங்கம். சோம்நாத் கோயிலில் எப்போதும் பக்தர்கள் குவிந்திருப்பர். இந்த தலத்தில் சிவ பெருமான ஒரு தீப்பிளம்பாக காட்சியளித்தார்.
நாகேஸ்வர்
இந்த ஜோதிர்லிங்கமும் குஜராத்தில் தான் இருக்கிறது. இங்கு மகாதேவரின் கோயில் பாதாளத்தில் இருப்பது தனிச் சிறப்பானது. நாகேஸ்வர் ஜோதிர்லிங்க தரிசனம் நம்மை அனைத்துவிதமான விஷங்களில் இருந்து தற்காக்கவல்லது.
பீமாசங்கர்
புனேவின் பீமா ஆற்றின் கரையில் உள்ளது பீமாசங்கர் கோயில். இங்கே உள்ள ஜோதிர்லிங்கம் கும்பகர்ணனின் மகன் பீமனால் நிறுவப்பட்டது. ஆனால் இந்த ஜோதிர்லிங்கம் பற்றி மட்டும் ஒரு சர்ச்சை இருக்கிறது. அதாவது குவாகாத்தி அருகே உள்ள பீமாசங்கர் கோயில் தான் 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்று என்று வாதாடுவோரும் உண்டு. சிலர் ஒரிசாவின் பீம்பூரில் உள்ள பீம் சங்கர் கோயில் தான் ஜோதிர்லிங்கங்களில் ஒன்று என்றும் கூறுவது உண்டு.
த்ரிம்பகேஸ்வர்
நாசிக் நகரம் 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றின் தலமாக இருக்கிறது. இங்கே மட்டும்தான் மூன்று தலை கொண்ட லிங்கம் உள்ளது. பிரம்மம், விஷ்ணு, மகேஷ் ஆகிய மூன்று பேரையும் பிரதிபலிக்கிறது.
க்ரிஷேஸ்வர்
மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் நகரில் உள்ளது க்ரிஷேஸ்வர் ஜோதிர்லிங்கம். இங்கே தான் சிவ பெருமான் ஒரு தாய் அவரது இறந்து போக மகனை உயிருடன் திரும்பத்தர வேண்ட அதை நிறைவேற்றினார் என்பது புராணம்.
வைத்தியநாத்
வைத்தியநாத் ஜோதிர்லிங்கத்தின் இருப்பிடமும் சர்ச்சையாகவே உள்ளது. சிலர் இது ஜார்க்கண்ட் மாநிலம் தியோகரில் இருக்கிறது எனக் கூறுகின்றனர். ராவணன் தன் வாழ்நாள் முழுவதும் சிவனை பூஜித்தான். அவ்வாறு பூஜித்து சிவனை தன்னுடன் இலங்கை வர ஒப்புக்கொள்ள வைத்தான். அவ்வாறு சிவனை இலங்கைக்கு அழைத்துச் செல்லும்போது தியோகரில் சிறிது நேரம் சிவனை ஓய்வெடுக்கச் செய்யுமாறு ராவணனிடம் விஷ்ணு கேட்டுக் கொண்டாராம். அவ்வாறு ராவணன் சிவனை ஓய்வெடுக்க தியோகரில் வைக்க அங்கே உருவானது ஜோதிர்லிங்கம்.
மகாகாலேஸ்வர்:
மகாகாலேஸ்வரர் கோயில், உஜ்ஜைன், இந்துக் கடவுளான சிவனைக் குறிக்கும் 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான மகாகாலேஸ்வர ஜோதிர்லிங்கத்தைக் கொண்டுள்ள புகழ் பெற்ற சிவன் கோயில் ஆகும். இது மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜைனில் உள்ளது. இது சிப்ரா ஆற்றாங்கரையில் அமைந்துள்ள மூன்று அடுக்குகள் கொண்ட கோயிலாகும்.இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். இது 7 முக்தி ஸ்தலங்களிலும் ஒன்றாகும். மனித ஆன்மாவை விடுவிக்கவல்லது.
ஓம்காரேஸ்வர்
மத்தியப் பிரதேசத்தின் காண்ட்வாவில் ஓம்காரேஸ்வரர் கோயில் உள்ளது. இது இந்து புராணங்களின்படி கடவுளர் அசுரர்களுடன் போர் புரிந்தபோது உருவானவர் தான் ஓம்காரேஸ்வர்.
காசி விஸ்வநாதர்
உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் உள்ளது காசி விசுவநாதர் கோயில் உள்ளது. இது இந்தியாவின் மிகப் பிரபலமான ஜோதிர்லிங்கமாகும். இது கங்கை நதியில் அமைந்துள்ளதால் இன்னும் இன்னும் அதிகமாக புனிதமாகக் கருதப்படுகிறது.
கேதார்நாத்:
உத்தர்காண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் ஆண்டில் 6 மாதங்கள் மட்டுமே திறந்திருக்கும். இங்கே சிவ பெருமான் ஜோதிர்லிங்கமாக இருக்கிறார். விஷ்ணு நரா மற்றும் நாராயணின் கோரிக்கையை ஏற்று அவர் இவ்வாறு இருப்பதாகக் கூறப்படுகிறது.
ராமேஸ்வரம்
தமிழகத்தில் ஒரு தீவில் உள்ளது ராமேஸ்வரம். ராமர் இங்கே மணலால் லிங்கத்தை உருவாக்கி வழிபட்டதாக புராணம் கூறுகிறது.
மல்லிகார்ஜுன
தென்னகத்தின் கைலாசம் எனக் கூறப்படுவது தான் மல்லிகார்ஜுன. இது ஆந்திரப்பிரதேசத்தின் ஸ்ரீசைலத்தில் உள்ளது. மல்லிகார்ஜுன (சிவன்), பிரம்மரம்பா (தேவி) இங்கே உள்ளனர்.