இந்தியாவில் பெரும்பாலான வீடுகளில் துளசி செடி காணப்படுகிறது. பல இந்து குடும்பங்களும் அதை வழிபடுகின்றனர்.
இந்து மதத்தில் அதன் முக்கியத்துவத்தைத் தாண்டி, துளசி அதன் பரந்த அளவிலான மருத்துவ குணங்களுக்காகவும் அறியப்படுகிறது. இந்த பல்துறை தாவரமானது 'மூலிகைகளின் ராணி' என்றும் குறிப்பிடப்படுகிறது. இதன் குணப்படுத்தும் பண்புகள் காரணமாக ஆயுர்வேதத்தில் ஹோலி கிரேயில் என்று போற்றப்படுகிறது. ஆயுர்வேத மருந்துகளின் ஒரு பகுதியான துளசி இருமல் மற்றும் சளிக்கு சிகிச்சையளிக்கிறது. இப்படி பல நன்மைகளைக்கொண்டுள்ள துளசி, உங்கள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆற்றல் கொண்டது என்பது உங்களுக்குத் தெரியுமா?
இம்மூலிகையானது, உங்களுக்கு ஆரோக்கியமான, பொலிவூட்டப்பட்ட மற்றும் இளமையான சருமத்தைப் பெருவதற்கு உதவுகிறது.
முகப்பொலிவை அதிகரிக்கும்
துளசி பளிச்சென்ற சருமத்தை பெற உதவும். இது ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி ஆகியவற்றின் சிறந்த மூலமாகும், இது இயற்கையாக சருமத்தை பிரகாசமாக்குகிறது. பால் மற்றும் துளசி இலைகளின் விழுதை சம அளவில் கலக்கி பேஸ்ட் அந்த பேஸ்டை உங்கள் முகம் மற்றும் கழுத்தில் தடவவும். சுமார் 20 நிமிடங்கள் காத்திருந்து பின்னர் அதை ஸ்க்ரப் செய்யவும். இது கரும்புள்ளிகள் மற்றும் நிறமிகளை குறைத்து சருமத்திற்கு பொலிவைச் சேர்க்கும். இது உங்கள் சருமத்துளைகளை நீக்கி, உங்கள் சருமத்தை பிரகாசமாக்கும்.
முகப்பரு வராமல் தடுக்கிறது
முகத்தில் தோன்றும் பருக்களிலிருந்து விடுபட, இந்த மூலிகையை உங்கள் சருமப் பராமரிப்பில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதன் பூஞ்சை எதிர்ப்பு (ஃபங்கல்) மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் காரணமாக, இது முகப்பருவைத் தடுத்து முகக்கறைகளை அகற்ற உதவுகிறது. துளசி மற்றும் வேப்ப இலைகளை ஒன்றாக அரைத்து பேஸ்ட் செய்யதுகொள்ளவும். சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து முகப்பருவில் தடவவும். அது காய்ந்த பிறகு,முகத்தை தண்ணீரில் கழுவி, உலர வைக்கவும். இதற்கு பதிலாக துளசி எண்ணெய் உள்ள பொருட்களையும் பயன்படுத்தலாம்.
சருமத்தை டோன் செய்தல்
உங்கள் விலையுயர்ந்த ஆல்கஹால் நிரப்பப்பட்ட ஸ்கின் டோனருக்கு மாற்றாக வீட்டில் தயாரிக்கப்பட்ட இந்த துளசி டோனர் மூலம் உங்கள் சருமத்திற்கு இயற்கையான மற்றும் ஆரோக்கியமான பளபளப்பைக் கொடுங்கள். கொதிக்கும் நீரில் சில துளசி இலைகளைச் சேர்த்து கஷாயமாக்கவும். கஷாயம் ஆறியதும் வடிகட்டி அதனுடன் சம அளவு ரோஸ் வாட்டர் சேர்க்கவும். அதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் சேமித்து வைக்கவும். இந்த கலவை ஒரு நல்ல தோல் டோனராக வேலை செய்யும்.
தோல் வயதாவதை குறைத்தல்
உங்கள் முகத்தில் வயதாவதற்கான அறிகுறிகள் தென்பட்டால், இத்தாவரத்தை நீங்கள் நம்பலாம். துளசி ஆண்டிஆக்ஸிடன்ட்களின் ஆற்றல் மிக்கது. மற்றும் தோல் பாதிப்பைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது. இது ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராக போராடுகிறது. இதனால் சருமத்தில் தோன்றும் வீக்கம் மற்றும் சிவப்பையும் தடுக்கிறது.
சருமத்தை சுத்தப்படுத்துகிறது
துளசி இலைகளின் துவர்ப்பு தன்மையானது அதிகப்படியான எண்ணெய் மற்றும் ஈரப்பதத்தை உறிஞ்சுவதற்கு உதவும். இது சருமத் துளைகளை இறுக்குவதன் மூலம் சருமத்தை ஆழமாக சுத்தப்படுத்தி தோல் அமைப்பை மேம்படுத்துகிறது, மற்றும் தோலின் நிறத்தை மேம்படுத்துகிறது. இது சருமத்தில் உள்ள அழுக்கு மற்றும் பிற அசுத்தங்களையும் நீக்குகிறது.