தமிழ் தெலுங்கு உள்ளிட்ட சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ஸ்ருதிஹாசன். இவருக்கு பாலிவுட் பக்கமும் ஒரு தனியிடம் உண்டு . அவ்வப்போது வித்தியாசமான போட்டோ ஷூட்டுகள் மூலம் ரசிகர் நெஞ்சங்களை கொள்ளைக்கொள்வார். சமீபத்தில் கூட திடீரென இன்ஸ்டாகிராம் லைவ் மூலம் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அப்போது தனது நண்பர் ஒருவரை கொரோனாவால் இழந்துவிட்டதாகவும், அனைவரும் நலமுடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
நடிப்பு தவிர பாடல், இசை என பல கலைகளில் ஆர்வம் கொண்டவர் ஸ்ருதிஹாசன். இந்நிலையில் தந்தை கமல்ஹாசனைப்போலவே இவரும் இப்போது தொகுப்பாளராக களம் இறங்க உள்ளார். ஏற்கனவே 2018-ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் “ஹலோ டாக் “ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்தார். அந்த நிகழ்ச்சியின்போது தனது செலிபிரட்டி நண்பர்களை அழைத்து அவர்களை பற்றிய சுவாரஸ்ய பக்கங்கள் குறித்து மக்களோடு உரையாடினார்.