முன்னால் கிரிக்கெட் வீரரின் மகளாக பிறந்து தற்போது நடிகையாக வளம்வருபவர் தான் நடிகை சிரியா ரெட்டி. சென்னையில் தனது பள்ளிப்படிப்பையும் கல்லூரி படிப்பையும் நிறைவு செய்தார் சிரியா என்பது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து தனது வாழ்க்கையை ஒரு தனியார் சேனலில் தொகுப்பாளினியாக இவர் தொடங்கினர்.


2002ம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான சாமுராய் என்ற படத்தின் மூலம் இவர் முதல்முதலில் நடிகையாக களமிறங்கினர். அன்று தொடங்கி சுமார் 18 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் திரைத்துறையில் பயணித்து வருகின்றார். பட வாய்ப்புகள் நிரம்ப வந்த நிலையிலும் இவர் இதுவரை 13 படங்களில் மட்டுமே நடித்துள்ளார். ரசிகர்கள் பலரும் இவர் ஏன் நிரம்ப படங்களில் நடிப்பதில்லை என்ற கேள்வியை இவரிடம் எப்போதும் முன்வைப்பதுண்டு. 


அந்த கேள்விக்கு தற்போது தனது ட்விட்டர் வாயிலாக பதிலளித்துள்ளார் சிரியா ரெட்டி. அவர் வெளியிட்ட பதிவில் "வாழ்நாள் முழுதும் பேசப்படும் கதாபாத்திரங்கள் மற்றும் படங்களில் மட்டுமே நான் நடிக்க விரும்புகிறேன். மேலும் நன் நடிக்கும் கதாபாத்திரங்களில் சுவாரசியம் இல்லை என்றால், அதை என்னால் ஏற்க முடிவதில்லை" என்று குறிப்பிட்டுள்ளார். 


சிறியா ரெட்டி 2008ம் ஆண்டு வெளியான காஞ்சிவரம் படத்திற்கு பிறகு பிரகாஷ்ராஜ் அவர்களுடன் இணைந்து சில சமயங்களில் என்ற படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.