Continues below advertisement


தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி ஸ்டைல் மூலம் ரசிகர்கள் மனதில் கோட்டையை கட்டியவர் தேனிசை தென்றல் தேவா. புலிக்கு பிறந்தது பூனையாகுமா எனும் பழமொழிக்கேற்ப அவரின் மகன் ஸ்ரீகாந்த் தேவாவும் அசாதாரணமான இசையமைப்பாளர் என்பதற்கு அவரின் ஹிட் பாடல்களே சாட்சி. 


 



குத்து பாடல்களின் கிங் இந்த வாரிசு :


பம்பர கண்ணாலே, ஆ முதல் ஃ தானடா, ஆடி மாசம் காத்தடிக்க, நீயே நீயே, காதல் வைபோகமே, அர்ஜுனா அர்ஜுனா, அட என்னாத்த சொல்வேனுங்கோ என லிஸ்ட் நீண்டு கொண்டே போகும். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் இருக்கும் இடங்களில் எல்லாம் நிச்சயம் ஸ்ரீகாந்த் தேவாவின் குத்து பாடல்கள் இருக்கும் என்பதை யாராலும் மறுக்கவே முடியாது. சமீபத்தில் அவருடன் நடைபெற்ற ஒரு சந்திப்பில் சாங் மேக்கிங் குறித்த சில ஸ்வாரஸ்யமான தகவல்களை பகிர்ந்தார். 


 






 


இது தாங்க வித்தியாசம் :


கானா பாடல்கள் என்றால் அதற்கு டோலக் எனும் ஒரு இன்ஸ்ட்ருமென்ட்டை பயன்படுத்துவார்கள். ஒன்றல்ல இரண்டல்ல கிட்டத்தட்ட பத்து டோலக் வாத்தியங்களை ஒன்றாக வாசிப்பார்கள்.    வார்த்தைகளை கொஞ்சம் இழுத்து பாடுவார்கள். அதுவே குத்து பாடல் என்றால் சற்று பெப்பியாக இருக்கும். இது தான் கானா பாடலுக்கும், குத்து பாடலுக்கும் உள்ள வித்தியாசம். நான் ஒரு பாடலை கம்போஸ் செய்வதற்கு ஏழு நாள் எடுத்துக்கொள்வேன் என்றால் ஏ.ஆர். ரஹ்மான் சார் 15 நாள் எடுத்துக் கொள்வார் என வைத்துக் கொள்ளலாம். ஆனால் அப்பா ஒரு பாடலை ஒரே நாளில் கம்போஸ் செய்து முடித்து விடுவார். அப்பாவின் இசை கம்போசிங் ஒரு ஃபாக்டரி போல இருக்கும். அதுவே இசைஞானி இளையராஜா சார் எல்லாம் அரை நாளில் ஒரு பாடலை முடித்து விடுவார்கள். கம்போசிங் செய்யும் போதே அந்த பாடல்கள் மக்கள் மத்தியில் ஹிட்டாகுமா இல்லையா என்பதை கணித்து விடுவார்கள். மக்கள் பெரும்பாலும் சிம்பிள் டியூன்களையே விரும்புவார்கள் என நாம் அறியாத பல ஸ்வாரஸ்யமான தகவல்களை பகிர்ந்தார் ஸ்ரீகாந்த் தேவா.