இத்தாலி மிலன் நகரில் உள்ள ஷாப்பிங் மாலில் அர்செனல் அணி வீரர் பாப்லோ மாரியை மர்மநபர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


இத்தாலி மிலன் நகரில் உள்ள ஷாப்பிங் மாலில் அர்செனல் அணி வீரர் பாப்லோ மாரியை மர்மநபர் ஒருவர் கத்தியால் குத்தினார். 5 பேரை மர்ம நபர் கத்தியால் குத்தியதில் ஒருவர் உயிரிழந்தநிலையில் பாப்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 


இதுகுறித்து அர்செனல் கால்பந்து அணி வெளியிட்ட அறிக்கையில், ”இத்தாலியில் கத்தியால் குத்தப்பட்டதைப் பற்றிய பயங்கரமான செய்தியைக் கேட்டு நாங்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தோம். மருத்துவமனையில் இருக்கிறார், பாப்லோ தற்போது நலமாக இருப்பதாகத் தெரிகிறது, ஆனால் நிலைமை மற்றும் என்ன நடந்தது என்பதைப் பற்றி நான் இப்போது சுருக்கமாகச் சொல்கிறேன். நாங்கள் அவருடன் தொடர்பில் இருப்போம், அவர் நலமாக இருக்கிறார் என்று நம்புகிறோம்” என தெரிவித்தது. 






பாப்லோ மாரியின் மேனேஜர் வெளியிட்ட அறிக்கையில், "பாப்லோ மாரிக்கு முதுகில் ஆழமான வெட்டு உள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக நுரையீரல் அல்லது வேறு எந்த முக்கிய உறுப்புகளையும் பாதிக்கவில்லை.  தற்போது பாப்லோ உயிருக்கு ஆபத்து இல்லை, அவர் விரைவில் குணமடைய வேண்டும். அவருக்கு சில காயங்கள் உள்ளன. ஆனால் மிகவும் தீவிரமாக இல்லை. தற்போது சுயநினைவுடன் இருக்கிறார்” என தெரிவித்திருந்தார்.






தொடர்ந்து, காவல்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், மாலில் தாக்குதல் நடத்திய நபருக்கு குறைந்தது 46 வயது இருக்கலாம். அந்த நபர் எதற்காக இப்படி செய்தார். தாக்குதலுக்கான நோக்கம் தெரியவில்லை. ஆனால், அந்த நபர் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், தாக்குதலுக்கு பிறகு அந்த நபர் உடனடியாக கைது செய்யப்பட்டார்” என தெரிவித்தனர்.