தமிழ் தெலுங்கு சினிமாவில் புகழ்பெற்ற இயக்குநர்களுள் ஒருவர் ஸ்ரீகாந்த் தேவா. இசையைப்பாளர் தேவாவின் மகன்.வாரிசு இசையமைப்பாளராக இருந்தாலும்  தனது தனி திறமையால் தடம் பதித்தவர் ஸ்ரீகாந்த் தேவா. அவரில் பல  பாடல்கள் இன்றைக்கும் பலரின் மொபைல் ஹிட் லிஸ்டில் இடம் பிடித்திருக்கிறது. கடந்த 2000 வது வருடம் வெளியான ‘டபுள்ஸ்’ என்னும் திரைப்படம் வாயிலாகத்தான் திரைத்துறையில் முதன் முதலாக காலடி எடுத்து வைத்தவர் தேவா.அதன் பிறகு சிம்பு நடிப்பில் உருவான குத்து படத்திற்கு இசையமைத்ததன் மூலம் பலரின் கவனத்தை ஈர்த்தார். குறிப்பாக ‘போட்டுத்தாக்கு’ என்னும் கிராமங்கள் தோறும் இன்றும் ஓயாமல் ஒலித்துக்கொண்டிருக்கிறது. ஜெயம் ரவி மற்றும் நதியா காம்போவில் வெளியான அம்மா - மகன் உறவை அடிப்படையாக கொண்டு வெளியான எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்திற்கு இசையமைத்திருந்தார். அந்த படத்தின் பாடல்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட். ஸ்ரீகாந்த் தேவாவின் திறமையைஅ அங்கீகரிக்கும் விதமாக , சிறந்த இசையமைப்பாளருக்கான விருதும் , எம். குமரன் படத்திற்கு கிடைத்தது. அதனை தொடர்ந்து சரத்குமார் நடிப்பில் வெளியான ‘ஏய் ‘ விஜய் நடிப்பில் வெளியான  சிவகாசி திரைப்படம் , ஜெயம் ரவி கூட்டணியில் பூலோகம், ஜீவா நடிப்பில் வெளியான  ‘திருநாள்’ , சித்தன் , சாணக்யா, நேபாளி உள்ளிட்ட பல படங்களுக்கு வரிசையாக இசையமைத்து வந்தார். 






அதிக குத்துப்பாடல்களை இசையமைத்து , பட்டி தொட்டி எங்கும் புகழடைந்த ஸ்ரீகாந்த் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு பிடித்த மெலடி பாடல் குறித்து பகிர்ந்துள்ளார். அதன் படி இசைஞானி இளையராஜா இசையில் உருவான , ‘என் வானிலே ..ஒரே வெண்ணிலா’ என்னும் பாடல்தான் அவருக்கு மிகவும் பிடித்த பாடலாம். நிறைய இளையராஜாவின் மெலடி பாடல்களை எடுத்துதான் குத்துப்பாடல் டியூனை எடுத்துதான் நாங்கள் மெலடி பாடல் உருவாக்குவோம் என தெரிவிக்கிறார். இளையாராஜாவும் இதையே செய்திருக்கிறாராம். நிலா அது வானத்து மேல என்னும் புகழ்பெற்ற பாடல், முதலில் சோகமான மெலடி பாடலாகத்தான் உருவாக்கினாராம் , இளையராஜா...அதன் பிறகு இயக்குநர் கேட்டுக்கொண்டதன் பேரில் , அதனை ஃபோக் பாடலாக உருவாக்கினாராம். இதனை ஸ்ரீகாந்த் தேவா பகிர்ந்துள்ளார். குத்துப்பாடல்கள் என்றாலே ஸ்ரீகாந்த் தேவாதான் என்பதை மாற்ற முடியாது என்றாலும் , கடந்த 2015 ஆம் ஆண்டிற்கு பிறகு புது புது இசையமைப்பாளர்களின் வரவு ஸ்ரீகாந்த் தேவாவிற்கான வாய்ப்புகளை குறைத்துவிட்டது எனலாம். அவர் மீண்டும் புதுமையோடு இசைத்துறையில் ரீ- எண்ட்ரி கொடுக்க வேண்டும் என்பதுதான் அவரது ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.