பிக்பாஸ் 5வது சீசனின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றியாளராக ராஜூ வெற்றி பெற்றார். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த பிரம்மாண்ட இறுதிப்போட்டியில் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மாலை 6.30 மணிக்கு தொடங்கிய இந்த போட்டி இரவு 11 மணி வரை நீடித்தது.




இந்த நிலையில், கடந்த பிக்பாஸ் சீசன் 4-ன் வெற்றியாளரும், நடிகருமான ஆரி அர்ஜூனன் தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று டுவிட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர், “ இந்த பிக்பாஸ் 5 சீசன் இறுதிப்போட்டியில் கோப்பையை வழங்கும் நிகழ்ச்சியில் எனக்காக நீங்கள் ஆவலுடன் காத்திருப்பீர்கள் என்று எனக்குத் தெரியும். உங்களையும், கமல்ஹாசன் சாரையும் மீண்டும் சந்திக்க நான் ஆவலாக இருந்தேன். ஆனால், துரதிஷ்டவசமாக நான் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க எனக்கு அழைப்பு விடுக்கவில்லை.” என்று பதிவிட்டுள்ளார்.






ஆனால், அதேசமயத்தில் கடந்த சீசன் 4-ல் நடிகர் ஆரிக்கு பலத்த போட்டியாளராக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்தவர் பாலா என்ற பாலாஜி முருகதாஸ். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “ ஊரடங்கு காரணமாக நாங்கள் அழைக்கப்படவில்லை. செட்டில் உள்ள பலரும் பாதிக்கப்படுவார்கள்.”இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.





இந்த பதிவை பாலா ரசிகர்கள் தற்போது ட்ரெண்டாக்கி வருகின்றனர். கடந்த சீசனில் பாலா ஆர்மி – ஆரி ஆர்மி என்று சமூக வலைதளங்களில் கடும் சண்டையே நிலவியது. அமைதியான போக்கை கடைபிடிக்கும் ஆரி அதிருப்தியை வெளிப்படுத்தியிருப்பதை, போன சீசன் முழுவதும் கோபமாகவும், ஆக்ரோஷமாகவும் நடந்துகொண்ட பாலா அமைதியான முறையில் விளக்கமளித்திருப்பதையும் ஒப்பிட்டு அவர்களது ரசிகர்கள் மீண்டும் சமூகவலைதளங்களில் மோதிக்கொள்ளத் தொடங்கியுள்ளனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண