இந்தியாவில் ஊரடங்கிற்கு பிறகு ஓடிடி தளங்களில் வெளியாகும் மணி வெப்சீரிஸ்களுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது. இந்தியாவில் நடப்பாண்டில் இரண்டு வெப் சீரிஸ் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அவற்றில் ஒன்று மணி ஹைஸ்ட். மற்றொன்று ஸ்குட் கேம். உலகளவில் இந்த இரண்டு வெப் சீரிஸ்கள் ரசிகர்கள் மத்தியில் எது சிறந்த வெப்சீரிஸ் எனும் போட்டி நடக்கும் அளவிற்கு இந்த இரண்டு வெப்சீரிஸ்களும் வரவேற்பை பெற்றது. இந்த இரண்டு வெப்சீரிஸ்களும் நெட்பிளிக்ஸ் இணையதளத்தில் வெளியானது.




இந்த நிலையில், ஸ்குட் கேம் ரசிகர்களுக்கு ஒரு இனிப்பான செய்தியை அதன் இயக்குநர் அளித்துள்ளார். ஸ்குட் கேமின் இயக்குனர் ஹாங் – டாங் ஹியூக் தென்கொரியாவில் உள்ள செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், நெட்ப்ளிக்ஸ் நிறுவனத்திடம் ஸ்குட் கேம் தொடரின் இரண்டு மற்றும் மூன்றாவது சீசன் குறித்து பேசி வருகிறேன். நாங்கள் எந்த நேரத்திலும் இதற்கான முடிவிற்கு வருவோம். அடுத்த சீசன் ஜூ –ஹன் கதாபாத்திரத்தை மையப்படுத்தி நடக்கும் என்று அவர் கூறியுள்ளார்.


கடந்த செப்டம்பர் 17-ஆம் தேதி வெளியானது ஸ்குட் கேம். லி ஜங் ஜே. பாரக் ஹா சூ, வி ஹா ஜூன், ஹோயோங் ஜங், ஓ யூங் சூ, ஹூ சங் டே, கிம் ஜூ ரூங் மற்றும் இந்தியாவை சேர்ந்த அனுபம் திரிபாதி ஆகியோர் இதில் நடித்துள்ளனர். கடுமையான பண நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் 456 பேர் விளையாடும் ஒரு வித்தியாசமான விளையாட்டுதான் ஸ்குட் கேமின் திரைக்கதை. இந்த போட்டியில் வெற்றி பெறுபவருக்கு ரூபாய் 45.6 பில்லியன் பரிசுத்தொகையை வெல்வார்கள்.




பலராலும் நிராகரிக்கப்பட்ட பிறகே ஸ்குட் கேம் திரைக்கதையை வெப் சீரிசாக அதன் இயக்குனர் இயக்கினார். இந்த வெப்சீரிஸ் நெட்ப்ளிக்ஸ் இணையதளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இந்த சீரிஸின் அடுத்த பாகங்கள் தொடர்பாக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். இந்த நிலையில், இந்த சீரிசின் இரண்டு மற்றும் மூன்றாவது பாகங்கள் உருவாகும் என்று அதன் இயக்குனர் ஹாங் கூறியிருப்பதாவது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க : ABP Nadu Exclusive | Video | என்னோட ரியல் லைஃப் கேரக்டர்தான் அது...! மின்னல் முரளி வில்லன் குரு சோமசுந்தரம் பளிச்...


மேலும் படிக்க : dhansuh | selvarahavan | ‛என் அண்ணன்தான் எனக்கு God Father..அவருக்கு நன்றியுள்ளவனா இருப்பேன்’ - தனுஷ் உருக்கம் !



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண