டொவினோ தாமஸ் நடிப்பில் வெளியான , ‘மின்னல் முரளி’ திரைப்படம்  நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி அனைவரது பாராட்டுகளையும் பெற்றுவருகிறது. யதார்த்த சினிமாவுக்கு பேர் போன மலையாள சினிமா உலகில் புதிய முயற்சியாய் சூப்பர் ஹீரோ சப்ஜெக்டை கையில் எடுத்து இயக்கியிருக்கிறார் இயக்குநர் பாசில் ஜோசப். சூப்பர் ஹீரோவாக வரும் டொவினோ தாமஸூக்கு எதிராக சூப்பர் வில்லனாக நடித்திருக்கிறார் நடிகர் குரு சோமு சுந்தரம். வெறுப்பு, ஏக்கம், சோகம் என அனைத்து உணர்ச்சிகளிலும் குரு சோமசுந்தரம் வெளிப்படுத்தியிருக்கும் நடிப்பு படத்திற்கு பெரும் பலமாய் அமைந்திருக்கிறது. அவரிடம் பேசினேன்.




 


மலையாள சினிமா உலகில் இது முயற்சி.. எப்படி இது வொர்க் அவுட் ஆகும் என்று முடிவு செய்தீர்கள்? 


உண்மையில் நான் அப்படிலாம் யோசிக்கல. ஏன் அப்படி சொல்றேனா.. இந்த முயற்சி நான் மட்டும் எடுக்கல. என்னோட சேர்ந்து இயக்குநர், தயாரிப்பாளர், டெக்னிசியன்கள் அப்படினு ஒரு பெரிய குழுவே எடுத்திருக்கு. என்னை பொருத்தவரை ஆரம்பத்தில் இந்த மொழியை எப்படி புரிஞ்சுக்கிட்டு நடிக்க போறேன் அப்படிங்கிறது மட்டும்தான் பயமாய் இருந்துச்சு. 


அந்த பயத்தை நம்மகிட்ட இருந்து எடுக்கணும் அப்படிங்கிறதுக்காக நான் அந்த மொழிய படிக்க ஆரம்பிச்சன். இப்ப எனக்கு மலையாளம் பேச மட்டுமல்ல வாசிக்க கூட தெரியும். என்னோட இந்த முயற்சி சுத்தி இருக்குறவங்களால கவனிக்கப்பட்டு பாராட்டுதலுக்கு உள்ளாகும் போது எனக்கு ஷிபு கேரக்டர் மேல பெரிய நம்பிக்க வந்திடுச்சு. 


இந்த கேரக்டர் ஒரு சூப்பர் வில்லனா இருந்தாலும், அந்தக் கேரக்டர்கல ஒரு குழந்தைத்தனம் தெரியுதே? 


ஆமா... நீங்க கரெக்டா கண்டுபிடிச்சுருக்கீங்க.. ஷிபு 40 வயசு குழந்தைதான். அதுதான் அந்தக்கேரக்டரோட அடி நாதம். சின்ன வயசுல அப்பாவையோ, அம்மாவையோ இழந்த குழந்தைங்க அப்படிதான் இருக்கும். நானும் அப்படிதான். என்னோட அம்மா 10 வயசுலே இறந்து போயிட்டாங்க. இன்னும் சொல்லனும்னா ஷிபு அப்படிங்கிற கேரக்டர் சோமுதான். ஷிபுவோட நிறைய தருணங்கல சோமு இருந்துருக்கான். ஆனா அது கெட்ட சோமு கிடையாது. குழந்தை சோமு.


டொவினோ தாமஸ் பற்றி சொல்லுங்களேன்?


ஒரு நடிகரா செட்ல கோ ஆக்டரருக்கு தெரியமா சில விஷயங்கள பண்ணுவோம். அது எதிர்ல நடிக்கிறவருக்கு ரொம்ப சர்ப்பிரைஸாக இருக்கும். அந்த மாதிரி டொவி கூட இருக்குற சீன்ல நிறைய ட்ரைப் பண்ணேன். ஆனா அதுக்கு டொவி எந்த வித மறுப்பும் தெரிவிக்கல.



ஆமா, அந்த கேரக்டர் அப்படிதானே ரியாக்ட் பண்ணும் அப்படினு அவர் புரிஞ்சுக்கிட்டார். செட்ல நானும் அவரும் அண்ணன் தம்பி மாதிரிதான் பழகினோம். இன்னைக்கும் மலையாள சினிமா ஏன் அப்படி யதார்த்தமா இருக்கு அப்படினா.. அங்குள்ள நடிகர்களும் அப்படி இருக்குறதாலத்தான்.


முழு பேட்டியை வீடியோ வடிவில் பார்க்க..