ரஜினியின் வேட்டையன் திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு, தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.
நாளை ரிலீஸ்:
ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் நாளை அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. த.செ.ஞானவேல் இயக்கியுள்ள இப்படத்தில் அமிதாப் பச்சன் , ஃபகத் ஃபாசில் , மஞ்சு வாரியர் , ரித்திகா சிங் , துஷாரா விஜயன் , ரானா டகுபடி , கிஷோர் , அபிராமி , விஜய் டிவி ரக்ஷன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். லைகா ப்ரோடக்ஷன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. தமிழ் , தெலுங்கு , இந்தி , மலையாளம் , கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இப்படம் வெளியாக இருக்கிறது.
ரசிகர்கள் கொண்டாட்டம்:
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ஒவ்வொரு முறை ரஜினி படம் வெளியாகும் போது திரையரங்குகள் திருவிழாவைப் போல் காட்சியளிக்கின்றன.
அதேபோல் ரஜினி படம் வெளியாகிறது என்றால் தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை அளிப்பதும் ஒரு சம்பிரதாயமாக மாறிவிட்டிருக்கிறது.
கடந்த ஆண்டு ஜெயிலர் , அதற்கு முன்பாக பேட்ட , கபாலி ஆகிய படங்களுக்கும் இதுபோல் விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது வேட்டையன் படத்திற்கும் பல்வேறு தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளன. இதனை ரசிகர்கள் தங்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். இன்னும் சில நிறுவனங்கள் விடுமுறை அறிவித்தது மட்டுமல்லாமல் தங்கள் ஊழியர்களுக்கு வேட்டையன் படத்திற்கான டிக்கெட்டுகளையும் கொடுத்துள்ளன.
இந்நிலையில் நாளை திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாளை காலை 9 மணிக்கு முதல் காட்சி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.