சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் இன்று வெளியானது ஜெயிலர் திரைப்படம். திரையரங்குகள் ரசிகர்களால் நிரம்பியுள்ளது. இந்த படத்தில், மோகன் லால், ஜாக்கி ஷெராஃப், சிவ ராஜ்குமார், சுனில், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவி, யோகி பாபு உள்ளிட்ட நடிகர் பட்டாளமே நடித்துள்ளது.


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ஜெயிலர் திரைப்படம் இன்று காலை வெளியான நிலையில் ரசிகர்களிடயே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ரஜினிகாந்த் படத்தில் எண்ட்ரி பாடலை எப்போதுமே செண்ட்டிமெண்டாக எஸ்பிபி பாடுவது தான் வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் தற்போது அவர் உயிரோடு இல்லை. இந்த குறையை தீர்க்க ரசிகர்கள் ரத்தமாரே  ஜெயிலர் படப் பாடலை ஏஐ தொழில்நுப்டத்தில் எஸ்பிபி குரலில் உருவாக்கி வெளியிட்டுள்ளனர்.


இந்த படத்தில் இடம்பெற்றுள்ள காவாலயா, ஹுக்கும் உள்ளிட்ட அனைத்து பாடல்களும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதிலும் செண்டிமெண்ட் பாடலாக படத்தில் வரும் ரத்தமாரே பாடல் ரசிர்களின் மனதை உருக்கும் விதத்தில் அமைந்துள்ளது. இந்நிலையில், ரசிகர்களின் மனதை மேலும் உருக்கும் விதத்தில் ஏஐ தொழில்நுட்ப வல்லுனர்கள் செய்துள்ளனர்.












அனிருத் இசையமைக்க விக்னேஷ் சிவன் எழுதிய பாடல் தான் ரத்தமாரே. இந்த பாடலினை விஷால் மிஸ்ரா பா. நான்கு நாட்களுக்கு முன்பு இந்த பாடல் வெளியானது. மிகவும் மெலடி பாடலான இந்த பாடலை எஸ்பிபி பாடினால் எப்படி இருக்கும் என்று ஏஐ விரும்பிகள் யோசித்தார்கள். விளைவு... அப்படியே எஸ்பிபி வெர்சனை உருவாக்கிவிட்டார்கள். ரத்தமாரே பாடலினை ஏஐ வெர்சனில் கேட்கும் போது, உண்மையில் எஸ்பி பாலசுப்பிரமணியம் உயிரோடு மீண்டும் வந்து விட்டாரோ என்று தோன்றுகிறது. அவ்வளவு சுத்தமாக வடிவமைத்துள்ளார்கள் ஏஐ வடிவமைப்பாளர்கள். இந்த பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


ஜெயிலர் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே இணையத்தை ஆக்கிரமித்தது. இணையத்தை திறந்தாலே ஜெயிலர் படம் குறித்த தகவல்களையே பார்க்க முடிகிறது. ஜெயிலர் படத்திற்கு இந்த அளவிற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டதற்கு ரஜினியின் முந்தைய படங்களும் முக்கியமான காரணம் என கூறப்படுகிறது. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்த உள்ளிட்ட திரைப்படங்கள் எதிர்பாத்த அளவில் வெற்றி அடையவில்லை. இந்நிலையில் ரஜினி ரசிகர்கள் அவரின் அடுத்த படத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர். 


இந்நிலையில் ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் கூறிய குட்டிக்கதையும், ஜெயிலர் பட பாடல் வரியில் இடம்பெற்ற பேரை தூக்க நாலூ பேரு பட்டத்தை பறிக்க நூறு பேரு என்ற என்ற வரிகளும் ரஜினி ரசிகர்களுக்கு படத்தின் மீதான ஆர்வத்தை அதிகப்படுத்தியது. இதனையடுத்து ரஜினி- விஜய் ரசிகர்களுக்கிடையே சமூக வலைதளத்தில் பெரும் மோதல் ஏற்பட்டது. இப்படி பல்வேறு காரணங்கள் ஜெயிலர் படத்தின் மீதான ஆர்வத்தை ரசிகர்களுக்கு ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


மேலும் படிக்க,


Jailer Review: ‘தியேட்டரில் தலைவரு அலப்பறை’ .. ரஜினியின் ஜெயிலர் படம் எப்படி? .. முதல் விமர்சனம் இதோ..!


அரசுப்பள்ளிகளுடன் கைகோத்த 1.4 லட்சம் முன்னாள்‌ மாணவர்கள்‌; மேலும் இணைய கால அவகாசம்- கல்வித்துறை உத்தரவு