இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் தடகளம், வில்வித்தை, நீச்சல், கால்பந்து போன்ற  21 பிரிவுகளில் 100 விளையாட்டு பயிற்சியாளர்கள் ஒப்பந்த  அடிப்படையில் நியமனம் செய்யவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் அக்டோபர் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் விளையாட்டில் ஆர்வமுள்ள இளைஞர்களை ஊக்குவிக்கவும், அனைத்து இடங்களிலும் விளையாட்டுகளைப் பரப்பவும் மற்றும் கட்டமைப்புகளை மேம்படுத்தும் விதமாக இந்திய அரசின் இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சகத்தால் கடந்த 1984 ஆம் ஆண்டு இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தொடங்கப்பட்டது. இங்கு வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கும் விதமாக தகுதியானப் பயிற்சியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். இதன்படி, தற்போது 100 விளையாட்டு பயிற்சியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் அக்டோபர் 15 ஆம் தேதி ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கான தகுதி மற்றும் தேர்வு செய்யும் முறைக் குறித்து அறிந்துக்கொள்ளலாம்.





விளையாட்டு பயிற்சியாளர்களுக்கான காலிப்பணியிட விபரங்கள்:


வில்வித்தை- 7


தடகளம் – 10


கூடைப்பந்து – 2


பாக்ஸிங்-  7


சைக்கிளிங்- 7


பென்சிங்- 7


கால்பந்து – 2


ஜிம்னாஸ்டிக்- 2


ஹாக்கி- 7


ஜூடோ- 7


கபடி- 2


சூட்டிங் -7


நீச்சல் – 2


டேபிள் டென்னிஸ் – 2


டேக்ஹோண்டா- 2


கைப்பந்து – 2


வெயிட் லிப்டிங் – 7


வெர்ஸ்டிங் – 7


வுஷூ (wuhu) -2  என 21 பிரிவுகளில் 100 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


வயது – விண்ணப்பத்தார்கள் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.


கல்வித்தகுதி: இந்திய விளையாட்டு ஆணையத்தில் அல்லது என்எஸ்/ என்ஐஎஸ் போன்ற ஏதாவதொரு ஒரு விளையாட்டு பயிற்சி நிறுவனத்தில் டிப்ளமோ இன் கோச்சிங் முடித்திருக்க வேண்டும். அல்லது இந்திய விளைாட்டுத்துறை தற்போது அறிவித்துள்ள  பணியிடங்களில் உள்ள விளைாயாட்டு பிரிவில் ஏதாவதொன்றில் சர்வதேசப் போட்டிகளில் விளையாடியவர்களாக இருக்க வேண்டும் விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பிக்கும் முறை: எனவே மேற்கண்ட தகுதியும், இந்திய விளையாட்டு ஆணையத்தில் பயிற்சியாளராக விரும்புவோர் www.sportsauthorityofindia.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில்  வருகின்ற அக்டோபர் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



தேர்வு முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதார்கள் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.


சம்பளம் – மாதம் ரூ.1,05,000 முதல் 1 லட்சத்து 50 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


மேலும் இப்பணிகள் குறித்த கூடுதல் விபரங்களை அறிய http://sportsauthorityofindia.gov.in/sai/public/assets/jobs/1epf என்ற பக்கத்தின் உதவியோடு தெரிந்துக்கொள்ளலாம்.