Trisha Marriage: மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்த த்ரிஷா, தனது அழகில் ரசிகர்கள் மனதை கொள்ளையடித்தார். விஜய்யுடன் இணைந்து லியோ படத்தில் நடித்துள்ள இவர், அஜித்துடன் விடா முயற்சியில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக அஜித்துடன் இணைந்து ஜி, கிரீடம், மங்காத்தா, என்னை அறிந்தால் படங்களில் நடித்துள்ளார். இது மட்டும் இல்லாமல் நீண்ட நாட்களுக்கு பிறகு மணிரத்னம் இயக்கும் கமல்ஹாசனின் 234வது படத்தில் த்ரிஷா நடிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. என்றென்றும் எவர்கிரீன் நாயகியாக வரும் த்ரிஷா சவுத் குயின் என்றே அழைக்கப்படுகிறார். 


40 வயதானதால் அடிக்கடி த்ரிஷாவின் திருமணம் பற்றிய வதந்திகளும் வந்த வண்ணம் உள்ளன. கடந்த 2015ம் ஆண்டு த்ரிஷாவுக்கும், வருண் மணியன் என்ற தயாரிப்பாளருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் த்ரிஷாவின் திருமணம் பாதியிலேயே நின்றது. த்ரிஷாவை நடிக்க கூடாது என மணமகன் வீட்டில் சொன்னதால் திருமணம் நின்றதாக கூறப்படுகிறது. அதன்பிறகும், நடிப்பில் முழு கவனத்தை செலுத்தி வருகிறார் த்ரிஷா. 


இந்த நிலையில், த்ரிஷாவின் திருமணம் குறித்த தகவல் மீண்டும் வைரலாக தொடங்கியுள்ளது. த்ரிஷா, பிரபல மலையாள தயாரிப்பாளருடன் காதலில் இருப்பதாகவும், இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. அந்த தயாரிப்பாளர் யார் என்ற தகவல் வெளியாகவில்லை. திருமணம் குறித்து அறிவிப்பை த்ரிஷாவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. எனினும், த்ரிஷாவே தனது திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டால் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர். 


முன்னதாக வின்னை தாண்டி வருவாயா படத்தில் நடித்ததன் மூலம் சிம்புவுடன் த்ரிஷா காதலில் இருப்பதாகவும், அவரை திருமணம் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் பரவின. எனினும், அந்த வதந்திக்கு சிம்புவுடன் திருமணம் இல்லை என கூறி த்ரிஷா முற்றுப்புள்ளி வைத்தார். ஒருமுறை தனது திருமணம் குறித்த கேள்விக்கு பதிலளித்த த்ரிஷா, திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்றும், அவரசமாக திருமணம் செய்து பல பொறுப்புகளை ஏற்று, பின்னர் விவாகரத்து செய்ய வேண்டிய நிலை வேண்டாம் என்றும்  கூறியிருந்தார். 


மேலும் படிக்க: Seetha Raman: குற்றத்தை ஏற்றுக் கொள்ள சொல்லும் ராம்.. மகா செய்யப் போவது என்ன? சீதா ராமன் இன்றைய எபிசோட்!


Yuvan Shankar Raja: "இதுவும் கடந்துபோகும்.." விஜய் ஆண்டனிக்கு ஆறுதல் சொன்ன யுவன்ஷங்கர் ராஜா..!