நாள் - 21.09.2023 - வியாழக்கிழமை
நல்ல நேரம்:
காலை 10.45 மணி முதல் காலை 11.45 மணி வரை
இராகு:
பகல் 1.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை
குளிகை:
காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை
எமகண்டம்:
காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை
சூலம் - தெற்கு
மேஷம்
மேஷம் ராசி அன்பர்களே...உடன்பிறந்தவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். வெளிவட்டாரங்களில் மதிப்பு அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவருடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். ஒப்பந்தப் பணிகளில் இருப்பவர்களுக்கு லாபகரமான சூழ்நிலைகள் உண்டாகும். தடைகள் குறையும் நாள்.
ரிஷபம்
ரிஷபம் ராசி அன்பர்களே...மனதில் நினைத்த காரியங்களைச் செய்து முடிப்பதில் அலைச்சல்கள் ஏற்படும். வாழ்க்கைத் துணைவருடன் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உத்தியோக பணிகளில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்துச் செல்லவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். வர்த்தகம் தொடர்பான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். அசதிகள் நிறைந்த நாள்.
மிதுனம்
மிதுனம் ராசி அன்பர்களே...சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். செய்கின்ற முயற்சிகளில் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். பிரபலமானவர்களின் அறிமுகம் சாதகமாக அமையும். நீண்ட நாள் கவலைகளிலிருந்து விடுதலை கிடைக்கும். சுபகாரிய செயல்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிர்பார்த்திருந்த சில உதவிகள் கிடைக்கும். லாபம் நிறைந்த நாள்.
கடகம்
கடகம் ராசி அன்பர்களே...எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாருடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். விரயம் நிறைந்த நாள்.
சிம்மம்
சிம்மம் ராசி அன்பர்களே...உடன்பிறந்தவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். கலைப் பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். வியாபார பணிகளில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். எண்ணிய பணிகளை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். தாயாருடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். மனதை உறுத்தி வந்த சில விஷயங்களுக்குத் தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பீர்கள். சுகம் நிறைந்த நாள்.
கன்னி
கன்னி ராசி அன்பர்களே...தாய்வழி உறவினர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்துச் செல்லவும். வழக்கு சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். சிறு தொழில் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கல்விப் பணிகளில் மேன்மை உண்டாகும். வியாபார பணிகளில் திருப்தியான சூழல் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்துவந்த மறைமுக தடைகளை அறிவீர்கள். கவலை குறையும் நாள்.
துலாம்
துலாம் ராசி அன்பர்களே...பயணங்களில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். மனை தொடர்பான விஷயங்களில் பொறுமை வேண்டும். உறவினர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். புதிய தொழில்நுட்ப கருவிகளில் ஈடுபாடு உண்டாகும். சிறு வியாபாரங்களின் மூலம் புதிய அத்தியாயத்தை உருவாக்குவீர்கள். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். வெற்றி நிறைந்த நாள்.
விருச்சிகம்
விருச்சிக ராசி அன்பர்களே.. புதிய நபர்களின் நட்பு மற்றும் அறிமுகம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் மனம் விட்டுப் பேசுவது நல்லது. செயல்பாடுகளில் சுதந்திரத் தன்மை மேம்படும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் மேம்படும். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.
தனுசு
தனுசு ராசி அன்பர்களே..முன்கோபத்தால் சிலரின் நட்புகளை இழப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். உணர்வுப்பூர்வமாகப் பேசுவதை விட சூழ்நிலை அறிந்து செயல்படுவது நல்லது. குழந்தைகளின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்லவும். நெருக்கமானவர்களைப் பற்றிய புரிதல் மேம்படும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
மகரம்
மகர ராசி அன்பர்களே...செயல்படுத்தும் அணுகுமுறையில் மாற்றம் ஏற்படும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபார ரீதியான பணிகளில் லாபம் மேம்படும். பேச்சுக்களில் பொறுமையைக் கையாளவும். வழக்கு பணிகளில் சில மாற்றமான சூழல் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வுடன் இருக்கவும். சுபகாரியம் தொடர்பான அலைச்சல்கள் உண்டாகும். நிம்மதி நிறைந்த நாள்.
கும்பம்
கும்ப ராசி அன்பர்களே..முயற்சிக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். அலுவலகத்தில் சாதகமான சூழல் ஏற்படும். பாராட்டுகள் கிடைக்கும். குழந்தைகளின் வழியில் அனுசரித்துச் செல்லவும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உல்லாச பயணம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். மறைமுக திறமைகள் வெளிப்படும். அரசுப் பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். தனம் நிறைந்த நாள்.
மீனம்
மீன ராசி அன்பர்களே...கலைநயம் மிகுந்த சிந்தனைகள் மேம்படும். எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாக அமையும். நண்பர்கள் உங்களது தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பார்கள். குடும்ப பெரியவர்களிடம் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அரசு சார்ந்த பணிகளில் ஆதாயம் ஏற்படும். செல்வாக்கு நிறைந்த நாள்.