தென்னிந்தியத் திரையுலகின் குறிப்பிடப்படும் கதாநாயகிகளில் ஒருவராக வலம் வரும் நடிகை ரெஜினா கெஸன்ட்ரா நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வரும் அவர், இரு மொழிகளில் தயாராகி வரும் சூர்ப்பனகை திரைப்படத்திலும் நடித்து வருகிறார். மேலும் அருண்விஜயின் பார்டர், அரவிந்த்சாமியின் கள்ளபார்ட், ஹாரர் திரில்லர் படமான கருங்காப்பியம் உள்ளிட்ட திரைப்படங்கள் ரெஜினா கெஸன்டரா நடிப்பில் அடுத்தடுத்து வெளிவர தயாராகி வருகின்றன.


அன்யாஸ் டுடோரியல்


இந்த வரிசையில் முதலாவதாக ரெஜினா கெஸன்ட்ரா நடிப்பில் வெளியான திரைப்படம் அன்யாஸ் டுட்டோரியல். இயக்குனர் பல்லவி கங்கி ரெட்டி இயக்கத்தில் ஹாரர் த்ரில்லர் படமாக வெளிவந்த அன்யாஸ் டுட்டோரியல் திரைப்படம் ஜூலை 1ஆம் தேதி நேரடியாக Aha தமிழ் தளத்தில் ரிலீஸாகி நல்ல விமர்சனங்களை பெற்றது. ரெஜினா கெஸன்ட்ராவுடன் இணைந்து நிவேதிதா சதீஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அன்யாஸ் டுட்டோரியல் திரைப்படத்தை, பாகுபலி திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான 'ஆர்கா மீடியா ஒர்க்ஸ்' நிறுவனம் தயாரித்துள்ளது. நிவேதிதா, ரெஜினா இணைந்து இந்த பட ப்ரோமோஷனுக்காக கொடுத்த நேர்காணலில் பெண்கள், சினிமா குறித்து சமத்துவ கருத்துக்களை முன்வைத்தனர். 



பெண்கள் டெக்னீஷியனா வரணும்


ரெஜினாவிடம் படத்தில் பெண் இயக்குனருடன் வேலை செய்தது குறித்து கேட்கையில், "இந்த கேள்வியையே கடந்து போய்டனும்ன்னு எனக்கு ஆசை. இப்படி ஒரு எண்ணமே தோணாம இருக்குற அளவுக்கு பெண்கள் தென்னிந்திய சினிமாவுல வேலை செய்யணும்னு ஆசை. நார்த்ல பெண்கள் பூம் மைக் பிடிச்சுட்டு இருப்பாங்க ஷூட்டிங் செட்ல. இங்கேதான் இன்னும் பெண்கள் வரவு குறைவா இருக்கு. என்னென்னமோ டெக்னாலஜி, அப்படி இப்படின்னு சொல்றோம், ஆனா இன்னமும் சினிமால அந்த சமத்துவம் இன்னும் கொஞ்சம் கூட வரல. மத்தபடி எனக்கு இவங்க செட்குள்ள போறதுக்கே ரொம்ப ஆர்வமாகவும், சந்தோஷமாகவும் இருந்துச்சு. நல்ல எக்ஸ்பீரியன்ஸ்." என்று கூறி முடித்தார்.


தொடர்புடைய செய்திகள்: போதையில் மாறுது பாதை… இளைஞரை கொடூரமாக கொன்ற சிறுவன்... தஞ்சையில் கொடூரம்


கேன்ஸ் ஒரு பிசினஸ்


கேன்ஸ் விழாவுக்கு சென்றது பற்றி பேசிய அவர், "நாங்க ரீசண்டா கேன்ஸ் போயிருந்தோம். மூணு பேர் போயிருந்தோம், ராக்கெட்டரி படத்துக்காக ஒரே ஒரு க்ரில் சிக்கன், ஒரு ஸ்க்விட் (கனவா), ஒரு கிளாஸ் வைன், ஒரே ஒரு கிளாஸ் விஸ்கி ஆர்டர் பண்ணிட்டு சாப்பிட்டு பில் பண்ணினோம். யுரோல பில் தர்றதால நமக்கு பெருசா ப்ரைஸ் தெரியல. இருபதாயிரம் ரூபாய் எடுத்துருக்குறதா எனக்கு பேங்க்ல இருந்து மெசேஜ் வருது. அந்த 3 டிஷ்க்கு 20,000 ரூபாய்ன்னு நெனைக்குறப்போ ஒரு நிமிஷம் ஷாக் ஆகிடுச்சு. கேன்ஸ் ஒரு பிசினஸ் பண்ற இடம்தாங்க, எக்சிபிஷன் போனா எப்படி க்யூபிக்கல்ஸ விப்பாங்களோ அது மாதிரி அங்க வர்றவங்க படங்களை பிசினஸ் பண்ணுவாங்க. அங்க போனதுல ஒரு நல்ல விஷயம் என்னன்னா, ஏ ஆர் ரஹ்மான் சாரோட லே மஸ்க் பாத்தேன். அவர் பண்ண ஒரு 36 மினிட்ஸ் படம் அது. ரொம்ப நல்லருந்துச்சு" என்றார். 



தென்னிந்திய நடிகை என்று கூற வேண்டாமா?


தென்னிந்திய நடிகை என்று செய்தியில் எழுதியதற்காக கோபப்பட்டீர்கள் என்று கேட்ட கேள்விக்கு, "அந்த பேச்சு ஏன் வந்துச்சுன்னா, தென்னிந்திய நடிகை வட இந்திய படத்தில் நடிக்கிறார்ன்னு ஒரு தலைப்போட ஆர்டிக்கல் வந்துச்சு. அதுபத்தி நான் பேசுனத தப்பா புரிஞ்சுகிட்டாங்க. நீங்க தென்னிந்திய நடிகைன்னு எழுதுங்க, தெற்காசிய நடிகைன்னு எழுதுங்க, டஸ்கின்னு எழுதுங்க, மில்கின்னு எழுதுங்க, நான் அதை பத்தி கவலைப் பட போறதில்ல. என்ன பாத்து, குஜராத்தியா, பெங்காலியா, ஹைதராபாத்தா, கோவாவான்னு எல்லாம் கேட்ருக்காங்க, உங்களுக்கு என்ன தோணுதோ அப்டியே வச்சுக்கோங்க. எனக்கு எந்த கவலையும் இல்லை" என்று கோபமாக கூறினார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.