அமெரிக்காவில் வசித்து வந்த கவர்ச்சி பட நடிகை சோபியா லியோன் தனது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கவர்ச்சி பட உலகைச் சேர்ந்த பல பிரபலங்கள் ஒரு கட்டத்தில் தங்களுடைய துறை மீதும், தங்களின் வாழ்க்கை மீது வெறுப்புக் கொண்டு திருந்தி வாழ நினைப்பார்கள். மிகவும் பிரபலமான சன்னி லியோன், மியா கஃலிபா உள்ளிட்டோரும் கூட பாலியல் ரீதியான படங்களில் நடித்து வந்த நிலையில் அதன்பிறகு அந்த துறையில் இருந்து விலகி விட்டனர். இதில் சன்னி லியோன் தன் கணவர் குழந்தைகள் என மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருகிறார்.
இப்படியான நிலையில் அமெரிக்காவின் கவர்ச்சி நடிகை மர்மமான முறையில் இறந்துள்ளார். 1997 ஆம் ஆண்டு ஜூன் 10 ஆம் தேதி அமெரிக்காவில் பிறந்த சோபியா லியோன் தன்னுடைய 18வது வயதில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்க்கும் அடல்ட் படங்களில் நடிக்க தொடங்கினார். கடந்த 9 வருடங்களில் இந்த துறையில் மட்டும் 1 மில்லியன் டாலர் வரை சம்பாத்தித்த சோபியா லியோன் மற்ற பிரபலங்கள், ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தார். இதனிடையே கடந்த மார்ச் 1 ஆம் தேதி உடலில் எந்தவித அசைவுமில்லாத நிலையில் சோபி லியோன் கண்டெடுக்கப்பட்டார்.
அவரை மீட்ட குடும்பத்தினர் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சோபியா உயிரிழந்துள்ளார். அவருடைய மறைவுக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கவர்ச்சி பட உலகை சார்ந்த பிரபலங்களின் மரணங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. ஏற்கனவே கேக்னே லின் கார்ட்டர், ஜெஸ்ஸி ஜேன் மற்றும் தாய்னா ஃபீல்ட்ஸ் ஆகியோர் மர்மமான முறையில் உயிரிழந்தனர்.
அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் சோபியா மரணமடைந்த தகவல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினர் சமூக வலைத்தளங்களில் நிதி வேண்டி பதிவு ஒன்றை வெளியிட்டதால் வெளியுலகுக்கு இந்த விஷயம் தெரிய வந்தது. அதில், “எங்கள் அன்பான சோபியா காலமான செய்தியை நான் கனத்த இதயத்துடன் பகிர்ந்து கொள்கிறேன். சோபியாவின் திடீர் இழப்பு குடும்பத்தினரையும் நண்பர்களையும் பேரழிவிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. சோபியாவுக்கு மரணத்துக்கு துக்கப்படுவதற்கும், நீதி தேடுவதை விட குடும்பம் நிதிச்சுமையையும் எதிர்கொள்கிறது” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சோபியா லியோன் மறைவுக்கு ரசிகர்கள் பலரும் தங்கள் சமூக வலைத்தள பக்கத்தில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க: Watch Video : இப்படி ஒரு விஷயத்தை செய்கிறாரே... ஜெயலலிதாவை எதிர்த்த ரஜினி! வைரலாகும் வீடியோ