NEET UG 2024: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் - மார்ச் 16 வரை நீட்டித்து அறிவிப்பு

NEET UG 2024: இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க, கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

NEET UG 2024: இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க, கால அவகாசத்த நீட்டித்து தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

Continues below advertisement

நீட் தேர்வுக்கு விண்ணபிக்க கூடுதல் அவகாசம்:

அதன்படி, வரும் மார்ச் 16ம் தேதி வரை, மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். முன்னதாக, NEET UG 2024 மருத்துவத் தேர்வுக்கு விண்ணப்பிக்க நேற்றுடன் அவகாசம் முடிவடைவதாக இருந்தது. இந்நிலையில், கூடுதல் அவகாசம் வேண்டும் என பல்வேறு தரப்பினரிடமிருந்து எழுந்த கோரிக்கைகளை தொடர்ந்து, மருத்துவ படிப்பில் ஆர்வமுள்ள மாணவர்கள் மார்ச் 16, 2024 அன்று இரவு 10:50 மணி வரை நீட் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பதிவேற்றலாம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. நீட் தேர்விற்கு விண்ணபிக்க மாணவர்கள்  https://exams.nta.ac.in/NEET/ என்ற இணையதளத்தை அணுகலாம்.

மே 5-ல் தேர்வு 

2024ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு மே 5ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்வு முடிவுகள் ஜூன் 14ஆம் தேதி வெளியாக உள்ளன. நீட் தேர்வு 3 மணி நேரம் 20 நிமிடங்களுக்கு.. அதாவது 200 நிமிடங்களுக்கு நடைபெற உள்ளது. மே 5 அன்று மதியம் 2 மணி முதல் 5.20 மணி வரை நேரடி முறையில் நடைபெறும் தேர்வுக்கு, ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். பிப்ரவரி 9ஆம் தேதி இதற்கான விண்ணப்பப் பதிவு தொடங்கிய நிலையில், மார்ச் 9 உடன் முடியும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அதற்கான அவகாசம் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு?

பொதுப் பிரிவினருக்கு - ரூ.1,700

EWS/ OBC - NCL பிரிவினருக்கு - ரூ.1,600

பழங்குடியின / பட்டியலின / மாற்றுத் திறனாளிகள் / மாற்றுப் பாலினத்தவர் ஆகியோருக்கு - ரூ.1000

இந்தத் தொகையை சரக்கு மற்றும் சேவை வரியுடன் (ஜிஎஸ்டி) செலுத்த வேண்டும். 

விண்ணப்பிப்பது எப்படி?

* முதல்முறை விண்ணப்பிக்கும் மாணவர்கள், https://neet.ntaonline.in/frontend/web/registration/index என்ற இணைப்பை க்ளிக் செய்து முன்பதிவு செய்ய வேண்டும்.

* சரியான இ- மெயில் முகவரி, தொலைபேசி எண்ணை மட்டுமே உள்ளிட வேண்டும்.

* முன்பதிவு படிவத்தைப் பூர்த்தி செய்த பிறகு, விண்ணப்பப் படிவத்தை நிரப்ப வேண்டும்.

* விண்ணப்ப எண் மற்றும் கடவுச் சொல்லை உள்ளிட்டு, விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு, விண்ணப்பதாரரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கையெழுத்து, கைரேகை ஆகிய ஆவணங்களை ஸ்கேன் செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

* முதல் இரண்டு படிவங்களையும் பூர்த்தி செய்த பிறகு, விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். அதன்பிறகே விண்ணப்பப் படிவம் உறுதிசெய்ய வேண்டும். சரியான தகவல்களை மட்டுமே தேர்வர்கள் உள்ளிட வேண்டும்.

தேர்வு குறித்த முழுமையான விவரங்களை அறிய: https://exams.nta.ac.in/NEET/images/neet-ug-2024-draft-ib-09022024.pdf என்ற தகவல் வழிகாட்டியைக் காணலாம்.

தொடர்புகொள்ள- தொலைபேசி எண்: +91-11-40759000

மின்னஞ்சல் முகவரி: neet@nta.ac.in 

கூடுதல் விவரங்களுக்கு: https://neet.nta.nic.in/

Continues below advertisement
Sponsored Links by Taboola