Soorarai Pottru Remake: சூரரைப்போற்று ஹிந்தி ரீமேக்கில் அக்‌ஷய் குமார்... என்ன எதிர்பார்க்கலாம்?

சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மென்ட் மற்றும் அபண்டன்ஷியா என்டர்டெய்ன்மென்ட்(Abundantia Entertainment) நிறுவனங்கள் இணைந்து சூரரைப்போற்று இந்தி பதிப்பை தயாரிக்க உள்ளனர்

Continues below advertisement

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யாவின் நடிப்பில் சுதா கொங்ரா இயக்கத்தில் வெளியான படம் ’சூரரைப் போற்று‘. பிரபல ஒடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியான சூரரைப்போற்று திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை அடுத்து, இப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்வதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஹிந்தி ரீமேக்கில் நடிப்பதற்காக அக்‌ஷய் குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது உறுதியாகி உள்ளது. 

Continues below advertisement

இந்த படம் இந்தியாவில் எளியோரும் பயணம் செய்யும் வகையில் பட்ஜெட் விமான சேவையை அறிமுகப்படுத்திய ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியா அபர்ணா பாலமுரளி நடித்திருந்தார்.  ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். முன்னதாக, படத்தை ஹிந்தியில் ரிமேக் செய்ய இருப்பது குறித்த விவரங்களை நடிகர் சூர்யா தனது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டார்.

சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மென்ட் மற்றும் அபண்டன்ஷியா என்டர்டெய்ன்மென்ட்(Abundantia Entertainment) நிறுவனங்கள் இணைந்து சூரரைப்போற்று இந்தி பதிப்பை தயாரிக்க உள்ளனர். தமிழில் இந்தப்படத்தை இயக்கிய சுதா கொங்கரோவே இந்தியிலும் இயக்க உள்ளார் என்பது கூடுதல் சிறப்பு. படத்தில் சூர்யா கதாபாத்திரத்தில் அக்‌ஷய் குமார் நடிக்க உள்ளார் என்பது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை என்றாலும், பாலிவுட் வட்டாரம் உறுதி செய்துவிட்டது.

பொதுவாக ரீமேக் படங்களில் சில மாற்றங்கள் செய்வது வழக்கம். அக்‌ஷய் குமார், அதிரடி சப்ஜெக்டில் நடித்து பழக்கப்பட்டவர். இதனால், சூரரைப்போற்று ரீமேக்கில் என்ன மாற்றங்கள் செய்ய போகிறார்கள் என ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர். சமீபத்தில் வெளியான நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் சுதா, “படத்தின் நீளத்தை குறைக்க முடிவு செய்திருக்கிறேன். தமிழைவிட ஹிந்தியில் நேரம் குறைவாக இருக்கும். மற்றபடி எனக்கு எந்த பெரிய வித்தியாசமும் இருக்கப்போவதாக தெரியவில்லை. ஹிந்தியில் ஐட்டம் சாங், காட்சிகள் என கூடுதலாக எதையும் சேர்க்கப்போவதும் இல்லை” என தெரிவித்திருக்கிறார்

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola