Valimai Update: ‛வலிமை’ இன்னொரு அப்டேட்; இசை உரிமை குறித்து யுவன் வீடியோ வெளியானது!

படத்தின் இசைக்கான உரிமையை சோனி மியூசிக் சவுத் நிறுவனம் பெற்றுள்ளது.யுவன்சங்கர் ராஜா இந்தப்படத்துக்கு இசையமைக்கும் நிலையில் அண்மையில் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது

Continues below advertisement

போனீ கபுர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கி அஜீத் நடிப்பில் வெளியாகும் ‘வலிமை’ படத்தின் மற்றொரு அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. படத்தின் இசைக்கான உரிமையை சோனி ம்யூசிக் சவுத் நிறுவனம் பெற்றுள்ளது. யுவன்சங்கர் ராஜா இந்தப்படத்துக்கு இசையமைக்கும் நிலையில் அண்மையில் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது அதற்கு யுவன் பின்னணி இசை அமைத்திருந்த நிலையில் தற்போது சோனி நிறுவனத்தின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

Continues below advertisement

முன்னதாக ‘வலிமை’ படத்தின் மோஷன் போஸ்டர் சிலநாட்களுக்கு முன் வெளியானது. இதன்மூலம், இரண்டு ஆண்டு காத்திருப்புக்கு பின் அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பு  நிறைவேறியது. ‘வலிமை’ படத்தின் மோஷன் போஸ்டர் சற்றுமுன் வெளியானது. இதன்மூலம், இரண்டு ஆண்டு காத்திருப்புக்கு பின் அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பு இன்று நிறைவேறியது.படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டது. அஜித் தொடர்பான சில காட்சிகளும், ஒரு சண்டைக்காட்சி மட்டுமே படமாக்க இருப்பதால், இன்னும் சில தினங்களில் அதுவும் படமாக்கப்பட்டு விடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. மற்ற நடிகர்களின் படங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகும் நிலையில், வலிமை குறித்த எந்த ஒரு தகவலும் வெளியாகாததால், விரக்தியின் உச்சத்திற்கு சென்ற அஜித் ரசிகர்கள், இப்படத்தின் தயாரிப்பாளர், படம் சம்பந்தபட்டவர்களை மட்டுமில்லாமல், எங்கெங்கெல்லாம், யார், யாரிடமோ ‘வலிமை’ படம் குறித்த அப்டேட் கேட்டு வந்தனர்.

இந்நிலையில், அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக, ‘வலிமை’ படத்தின் மோஷன் போஸ்டர்  வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, ‘வலிமை’ படத்தின் மோஷன் போஸ்டர், ஃபர்ஸ்லுக் வெளியானது. இதன்மூலம், இரண்டு ஆண்டு காத்திருப்புக்கு பின் அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறியது. இதனால், ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். மாஸ் லுக்கில் அஜித் இருக்கிறார். போஸ்டர் வெளியான சில நிமிடங்களிலையே சமூகவலைதளங்களில் வைரலானது. முன்னதாக,  #ValimaiMotionPoster என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டானது குறிப்பிடத்தக்கது. பிரதமரின் சென்னை வருகை, சென்னை டெஸ்ட் போட்டி, கால்பந்து போட்டியில் வலிமை அப்டேட் எதிரொலித்தது குறிப்பிடத்தக்கது.

நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில், கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட வானதி சீனிவாசனிடம், வலிமை படம் குறித்த அப்டேட்டை கேட்டதற்கு, தேர்தலில் வெற்றி பெற்றவுடன் அப்டேட் கிடைக்கும் என்றார் அவர். பின்னர், வானதி வெற்றி பிறகு, அவரிடம் மீண்டும் அது தொடர்பாக கேட்டனர். இதுபோல பலரிடம், பல இடங்களில்  ‘வலிமை’ அப்டேட்களை ரசிகர்கள் கேட்டு வந்ததால், படம் குறித்த அப்பேட் சரியான நேரத்தில் வரும் என்றும், அதுவரைக்கும் ரசிகர்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும் எனவும் ரசிகர்களுக்கு அறிக்கையின் மூலம் அஜித் கூறினார். ஆனால், எதையும் கேட்காத மனநிலையில் அஜித் ரசிகர்கள் இருந்தனர்.

சமீபத்தில் அஜித் ரசிகர்கள், கோயில் பூசாரிகளிடம் வலிமை அப்டேட் கேட்ட வீடியோக்களும் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகின. இதேபோல், இந்தியா - நியூசிலாந்து உலக சாம்பியன்ஷிப் டெஸ்ட் போட்டி, யூரோ கால்பந்து போட்டி என எங்கு பார்த்தாலும், வலிமை அப்டேட் கேட்டனர்.
Continues below advertisement
Sponsored Links by Taboola