இந்திய திரையுலகில் மிகவும் பிரபலமானவராக வலம் வருபவர் நடிகர் சோனு சூட். இந்தி, தெலுங்கு மட்டுமின்றி தமிழ் மற்றும் கன்னட திரையுலகிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடித்து வரும் சோனு சூட் உண்மையிலேயே மனிதாபிமானத்திற்காக அறியப்பட்டவர். கொரோனா காலத்தில் அவர் செய்த உதவி அதிலும் குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் மக்களுக்கு தேவையான ஆக்ஸிஜன் வசதி மற்றும் பல உதவிகளை செய்து அவர்கள் மத்தியில் ரேக்ளா ஹீரோவானார். அதற்கு பிறகும் அவரின் வீட்டின் வெளியே தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் உதவி கேட்டு வரிசையில் நின்றுள்ளனர்.


 



இப்படி ஆயிரக்கணக்கான மக்களுக்கு உதவிய சோனு சூட் ஸ்விக்கி டெலிவரி செய்யும் நபர் ஒருவருக்கு ஆதரவாக சோசியல் மீடியாவில் போஸ்ட் செய்த ட்வீட்டுக்கு அவரின் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்தாலும், அவரை விரும்பாத நெட்டிசன்கள் பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள். சமீபத்தில் ஸ்விக்கி டெலிவரி நபர் ஒருவர் கஸ்டமர் வீட்டில் உணவை டெலிவரி கொடுத்துவிட்டு வீட்டின் வெளியே இருந்த ஷூக்களை திருடும் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வந்தது.


அதற்கு நடிகர் சோனு சூட் தனது ஆதரவை ஸ்விக்கி டெலிவரி நபருக்கு எக்ஸ் தளபக்கம் மூலம் தெரிவித்துள்ளார். " டெலிவரி செய்யும் நபர் உணவை வழங்கிய பிறகு ஷூக்களை திருடி சென்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம். அதற்கு பதிலாக அவருக்கு ஒரு ஜோடி ஷூக்களை வாங்கி கொடுங்கள். அது அவருக்கு தேவைப்படலாம். அன்பாக  இருங்கள்" என ட்வீட் செய்து இருந்தார்.   


 



நடிகர் சோனு சூட் ரசிகர்கள் பலர் அவரின் இந்த டீவீட்டை பாராட்டினாலும்,  ஒரு சில நெட்டிசன்கள் எதிர்மறையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். ஒரு சில சமூக ஊடக பயனர்கள் நியாயப்படுத்லை எதிர்க்கிறார்கள். தேவைக்காக திருடுவது நியாயமில்லை. ஒரு டெலிவரி பையனை காட்டிலும் மில்லியன் கணக்கான மக்கள் ஏழ்மையில் உள்ளனர். பலரும் கடினமாக உழைத்து அவர்களின் வாழ்வாதாரத்தை நடத்துகிறார்கள். திருடுவதை நியாயப்படுத்துவது மரியாதையான செயல் அல்ல என பகிர்ந்துள்ளனர். 







"ஒரு செயின் பறிப்பவர் தங்க சங்கிலியை பறித்துவிட்டால் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் அவருக்கு புது சங்கிலி வாங்கி கொடுங்கள். அது அவருக்கு உண்மையிலேயே தேவைப்படலாம். அன்பாக இரு" என மற்றுமொரு பயனாளர் கருத்தை தெரிவித்து இருந்தார். 


இப்படி பல பயனாளர்கள் அவரவர்களின் கருத்தை சோனு சூட் எதிராக பதிவு செய்து வருகிறார்கள்.