தஞ்சாவூர்: தஞ்சாவூா் மாவட்டத்தில் மின்னணு எந்திரங்களில் வேட்பாளர் பெயர், சின்னங்களுடன் வாக்குச்சீட்டு பொருத்தும் பணி தொடங்கியது


தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் மின்னணு வாக்குப் பதிவு எந்திர மேலாண் (இ.வி.எம்.எஸ். 2.0) என்கிற மென்பொருள் மூலம் குலுக்கல் முறையில் சட்டப்பேரவை வாரியாக ஏற்கெனவே ஒதுக்கீடு செய்யப்பட்டது.


மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்


தொடர்ந்து, திருவிடைமருதூர் தொகுதிக்கு தலா 351 மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களும், கட்டுப்பாட்டுக் கருவிகளும், 380 வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை எந்திரங்களும், கும்பகோணம் தொகுதிக்கு தலா 346 மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களும், கட்டுப்பாட்டுக் கருவிகளும், 375 வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை எந்திரங்களும் அனுப்பி வைக்கப்பட்டன.


இதேபோல் பாபநாசம் தொகுதிக்கு தலா 361 மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களும், கட்டுப்பாட்டுக் கருவிகளும், 391 வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை எந்திரங்களும், திருவையாறு தொகுதிக்கு தலா 376 மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களும், கட்டுப்பாட்டுக் கருவிகளும், 408 வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை எந்திரங்களும் அனுப்பி வைக்கப்பட்டன.




தஞ்சாவூர் தொகுதிக்கு எந்திரங்கள்


மேலும்  தஞ்சாவூர் தொகுதிக்கு தலா 350 மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களும், கட்டுப்பாட்டுக் கருவிகளும், 379 வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை எந்திரங்களும், ஒரத்தநாடு தொகுதிக்கு தலா 344 மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களும், கட்டுப்பாட்டுக் கருவிகளும், 373 வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை எந்திரங்களும், பட்டுக்கோட்டை தொகுதிக்கு தலா 326 மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களும், கட்டுப்பாட்டுக் கருவிகளும், 353 வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை எந்திரங்களும், பேராவூரணி தொகுதிக்கு தலா 312 மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களும், கட்டுப்பாட்டுக் கருவிகளும், 338 வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை எந்திரங்களும்  அனுப்பி வைக்கப்பட்டன.


வாக்குச்சீட்டு பொருத்தும் பணி


இந்நிலையில், மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில் வேட்பாளர் பெயர், சின்னங்களுடன் வாக்குச் சீட்டு பொருத்தும் பணி அந்தந்த சட்டப்பேரவைத் தொகுதிகளிலுள்ள கோட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்களில் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர், வட்டாட்சியர், வேட்பாளர்கள், வேட்பாளர்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் முன்னிலையில்  தொடங்கியது.