டாஸ்மாக் விடுமுறை 


தமிழ்நாட்டில் மக்களவைக்கான பொதுத்தேர்தல் எதிர்வரும் 19.04.2024 அன்று நடைபெறுகிறது. இதையொட்டி, 17.04.2024 காலை 10.00 மணி முதல் 19.04.2024 நள்ளிரவு 12.00 மணி வரை மற்றும் 04.06.2024 ஆகிய தினங்களில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள் அரசு டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் [அனைத்து FL2 to FL1 (FL6 தவிர)] மூடப்பட வேண்டும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
 

DRY DAY


அரசாணை மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையர் அவர்களின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளவாறு மேற்கண்ட தினங்கள் DRY DAY ஆக அனுசரித்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள், அரசு டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் மூடப்பட வேண்டும் என நெறிமுறை வரையறுக்கப்பட்டுள்ளது.

 

எதிர்வரும் 17.04.2024 காலை 10.00 மணி முதல் 19.04.2024 நள்ளிரவு 12.00 மணி வரை மற்றும் 04.06.2024 ஆகிய தினங்களில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள், அரசு டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் ஆகிய அனைத்தும் மூடப்பட வேண்டும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். எனவே, மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவின்படி 17.04.2024 அன்று காலை 10.00 மணி முதல் 19.04.2024 நள்ளிரவு 12.00 மணி வரை மற்றும் 04.06.2024 ஆகிய தினங்களில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள் டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் இயங்காது எனத் தெரிவிக்கப்படுகின்றது.