இயக்குநர் நெல்சனுக்கு உதவி இயக்குநராக தனது சினிமா பயணத்தைத் தொடங்கி, தற்போது இயக்குநர், பாடலாசிரியர், நடிகர், பாடகர் என பல அவதாரங்கள் எடுத்து நிற்பவர் அருண்ராஜா காமராஜ். அண்மையில் வெளியான ‘ஜெயிலர்’ படத்தில் ஃபர்ஸ்ட் சிங்கிளாக வெளியாகி ஹிட் அடித்துள்ள காவாலா பாடலை எழுதியுள்ளார் அருன்ராஜா காமராஜ். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் அருண்ராஜா எழுதும் ஆறாவது பாடல் இது. அவர் எழுதிய மற்ற பாடல்களின் லிஸ்டை பார்க்கலாம்.


கபாலி – நெருப்பு டா


ரஜினி படங்களில் காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டுவரும் ஒரு வழக்கம் இருக்கிறது. அது என்னவென்றால் ரஜினியின் இண்ட்ரோ பாடலை எப்போதும் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் தான் பாடுவார். அந்த வழக்கத்தை முதன்முறையாக உடைத்தது அருண்ராஜா காமராஜ் தான். கபாலி படத்தில் ’நெருப்பு டா ‘ரஜினிக்கு இண்ட்ரோ சாங் எழுதினார் அருண்ராஜா காமராஜ். எழுதியது மட்டுமில்லாமல் அந்தப் பாடலை பாடவும் செய்தார். இதுவரை நாம் பார்த்திராத புதியதோர் காம்பினேஷனாக இருந்தது இந்தப் பாடல்.


காலா


கபாலி படத்தைத் தொடர்ந்து ரஞ்சித் இயக்கி சந்தோஷ் நாராயணன் இசையமைத்த அடுத்த படமான காலா படத்திலும் மூன்று பாடல்களை எழுதியுள்ளார் அருண்ராஜா காமராஜ். ‘செம வெய்ட்டு’ பாடலை டோப் அடிலிக்ஸ் குழுவுடன் இணைந்தும் ‘கற்றவை பற்றவை’ என்கிற பாடலை கபிலன் உடன் இணைந்தும் எழுதினார். ஷங்கர் மகாதேவன் பாடிய ‘தங்க செல’ பாடலை தனியாக எழுதினார்.


தர்பார்


ஏ.ஆர் முருகதாஸ் இயக்கிய தர்பார் படத்தில் அனிருத் இசையில் ‘கண்ணுல திமிரு’ என்கிற பாடலை எழுதியிருக்கிறார் அருண்ராஜா காமராஜ்.


ஜெயிலர்


தற்போது ஜெயிலர் படத்தில் ‘காவாலயா’ என்கிற பாடலை எழுதியுள்ளார் அருண்ராஜா காமராஜ். பாதி தெலுங்கு பாதி தமிழ் என வெளியாகியுள்ள இந்தப் பாடல் அனைவரையும் கவர்ந்துள்ளது.


அருண்ராஜா காமராஜ் இயக்கிய படங்கள்


கடந்த 2018ஆம் ஆண்டு கனா படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானார் அருண்ராஜா காமராஜ். இந்தப் படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்தார். தொடர்ந்து 2022ஆம் ஆண்டு வெளியான ‘நெஞ்சுக்கு நீதி’ என்கிற படத்தை இயக்கினார். இந்தியில் வெளியான ‘ஆர்டிகல் 15’ படத்தின் ரீமேக் நெஞ்சுக்கு நீதி. உதயநிதி ஸ்டாலின் இந்தப் படத்தில் நடித்திருந்தார். தற்போது நடிகர் ஜெய்யை வைத்து வெப் சீரிஸ் ஒன்றை இயக்கி வருகிறார்.


ஜெயிலர்


 நெல்சன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ஜெயிலர். ரஜினிகாந்த், தமன்னா, ஜாக்கி ஷ்ராஃப், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.