Sonam Kapoor: மகனுக்கு ‘வாயு’ என பெயர் வைத்த தனுஷின் ராஞ்சனா நாயகி.. காரணம் இதுதானாம்..

கணவர் மற்றும் குழந்தையுடன் மஞ்சள் நிற ஆடை அணிந்துக்கொண்டு புகைப்படத்தை வெளியிட்ட சோனம்  தனது மகனின் பெயர் ‘வாயு’ என ரிவீல் செய்திருக்கிறார்.

Continues below advertisement

கடந்த 2007ஆம் ஆண்டு  சஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கத்தில் வெளியான ’சாவரியா’ திரைப்படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை சோனம் கபூர். இவர் பிரபல பாலிவுட் நடிகர்களான அனில்கபூர் - சுனிதா கபூர் ஆகியோரது மகள் என்பது குறிப்பிடத்தக்கது. சோனம் கபூர் கடந்த 2018ஆம் ஆண்டு தொழிலதிபர் ஆனந்த் அஹூஜா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். லண்டனில் வசித்து வரும் இவர்களுக்கு கடந்த மாதம் ஒரு அழகான ஆண் குழந்தையும் பிறந்தது. இந்த நிலையில் நடிகை சோனம் கபூர் தனது குழந்தைக்கு வைத்திருக்கும் பெயரை தனது ரசிகர்களுக்காகவும் , நலம் விரும்பிகளுக்காகவும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் சோனம்.

Continues below advertisement


கணவர் மற்றும் குழந்தையுடன் மஞ்சள் நிற ஆடை அணிந்துக்கொண்டு புகைப்படத்தை வெளியிட்ட சோனம்  தனது மகனின் பெயர் ‘வாயு’ என ரிவீல் செய்திருக்கிறார். மேலும் அந்த புகைப்படத்திற்கு கேப்ஷனாக பெயரின் விளக்கத்தையும் கொடுத்திருக்கிறார் . அதில் “ எங்கள் வாழ்க்கையில் புதிய அர்த்தத்தை சுவாசித்த சக்தியின் ஆன்மா... அபாரமான தைரியத்தையும், ஹனுமான் மற்றும் பீம் ஆத்மாவின் வலிமை..புனிதமான எங்களுடையது ஆகிய அனைத்தின் ஆன்மாவிலும்  நாங்கள் எங்கள் மகன் வாயு கபூர் அஹுஜாவுக்கு ஆசீர்வாதங்களைத் தேடுகிறோம்.” என குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் ஏன் வாயு என பெயர் வைத்தோம் என்பதற்கான காரணத்தையும் அவர் பதிவிட்டிருக்கிறார்.


சோனம் கபூர் கூறிய பெயர்காரணம் :

”இந்து வேதங்களில் வாயு என்பது ஐந்து தத்துவங்களில் ஒன்றாகும். வாயு சுவாசத்திற்கான கடவுள், ஹனுமான், பீம் மற்றும் மாதவ் ஆகியோரின் ஆன்மீக தந்தை மற்றும் அவர் காற்றின் நம்பமுடியாத சக்தி வாய்ந்த இறைவன். பிராணம் என்பது வாயு, பிரபஞ்சத்தின் வாழ்க்கை மற்றும்  அறிவுக்கான வழிகாட்டும் சக்தி. பிராணன், இந்திரன், சிவன் மற்றும் காளியின் அனைத்து தெய்வங்களும் வாயுவுடன் தொடர்புடையவை. தீமைகளை அழித்து சுவாசிக்க செய்ய முடியும். வாயுவை வீரனாகக் கூறுவார்கள். அதோடு தைரியமான மற்றும் வசீகரிக்கும் அழகன் என்பார்கள்.” என  கேப்ஷனில் பகிர்ந்திருக்கிறார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola