சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்தித்தார்.
இலங்கை கடற்படையாள் தொடர்ந்து தாக்கப்பட்டு வரும் தமிழக மீனவர்கள் குறித்த கேள்விக்கு..
இலங்கை கடற்படையால் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் எட்டு பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஒன்றிய அரசு தமிழக மீனவர்களின் மேல் அக்கறை செலுத்துவதே இல்லை. எக்கேடு கேட்டாலும் நமக்கு கவலை இல்லை என்கிற அலட்சியப் போக்கில் செயல்படுவது மிகுந்த வேதனை அளிக்கிறது. உடனடியாக இந்திய ஒன்றிய அரசு இதில் தலையிட வேண்டும் கைது செய்யப்பட்ட எட்டு மீனவர்களையும் விடுவிப்பதற்கும் அவருடைய உடமைகளை திரும்ப பெறுவதற்கும் ஆவன செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
தமிழ்நாடு முதல்வர் அவர்களும் இது குறித்து இந்திய ஒன்றிய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் வேண்டுகோள் விடுக்கிறோம்.
பாஞ்சான்குளம் பகுதியில் நடைபெற்ற ஊர் கட்டுபாடுகளில் தமிழக அரசு விரைந்து உடனடியாக பெட்டி கடைக்காரர் மீது நடவடிக்கை எடுத்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. அதை வரவேற்கிறோம், ஆனால் ஊர் கட்டுப்பாடு என்கிற பெயரால் சோசியல் பாய்காட் என சமூக புறக்கணிப்பை நடைமுறைப்படுத்தி இருக்கிறார்கள். இது சாதாரணமான ஒன்று அல்ல ஒரு தனி நபர் மீது நடவடிக்கை எடுப்பது என்பது வேறு ஒரு சமூகத்தையே ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பது என்பது, வேறு அதாவது ஒடுக்கப்பட்ட சமூகத்தில் ஒரு நபரை தாக்குவது அல்லது ஒரு நபருக்கு எதிரான வன்கொடுமை ஈடுபடுவது என்பது வேறு. ஆனால் ஒட்டுமொத்த சமூகத்தையே ஒரு ஊரையே ஒதுக்கி வைப்பது கடைகளின் பொருள் கொடுப்பதில்லை, வேலை வாய்ப்பு கொடுப்பதில்லை, உறவு வைத்துக் கொள்வதில்லை என்பதை போன்ற ஒரு ஒடுக்குமுறையை திணிப்பது என்பது ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த மிக மோசமான பழமைவாத போக்கு.
சாதிய வன்மத்தின் உச்சம் இதை அரசு அலட்சியமாக பார்க்கக்கூடாது. இதற்கு காரணமானவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அதிலும் குறிப்பாக இந்த மகேஸ்வரன் மீது போடப்பட்டிருக்கிற வழக்கில் எஸ்.சி.எஸ்.டி., பிரிவு போடப்படவில்லை. ஒவ்வொரு பிரச்சனையிலும் வழிந்து போராடி அதன் பிறகு தான் வழக்கை பதிவுசெய்யும் உளவியலை காவல்துறை கொண்டிருக்கிறது. எனவே தமிழக அரசு காவல்துறைக்கு தமிழகம் தழுவி அளவில் உரிய வழிகாட்டுதலை தர வேண்டும்.
ஆ.ராசா மீது கூறப்படும் இந்து விரோத குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு:
இந்து மனுதர்மத்தில் கூறியதை நானும் சுட்டி காட்டினேன். நான் ஒட்டுமொத்தமாக இந்து சமூகத்தைச் சார்ந்த பெண்களை எல்லாம் இழிவுபடுத்தியதாக, இந்த சனாதன கும்பல் மிகப்பெரிய சமூகப் பதற்றத்தை உருவாக்கினார்கள். இந்தியா முழுவதும் அதை கொண்டு போய் சேர்த்தார்கள் அதேபோல நானும் அவரும் கடந்து கொண்ட நிகழ்ச்சி தான் விடுதலை இதழில் ஆசிரியர் பொறுப்பேற்று 60 ஆண்டுகள் நிறைவு செய்த நிலையில் திராவிடர் கழகத்தினுடைய தலைவர் ஆசிரியருக்கு வீரமணி அவர்களை பாராட்டுகிற அந்த நிகழ்ச்சியில் இரண்டு பேரும் ஒரே கருத்தை பேசினோம். அவர் மனுதர்மத்தில் உள்ள செய்தியை எடுத்து மேற்கோள் காட்டி சொன்னார். இந்து என்று ஒத்துக்கொண்டால் சூத்திரன் என்று ஒத்துக் கொள்ள வேண்டிவரும். சூத்திரன் என்று ஒத்துக்கொண்டால் அதற்கு மனுதர்மம் என்ன பொருள் தருகிறதோ அந்த பொருளையையும் நீ ஏற்றுக்கொள்ள வேண்டும் ஆகவே நான் இந்து இல்லை என்று நீ ஏன் சொல்லக்கூடாது என்று சூத்திரர்களை பார்த்து சூத்திரர்களாக இந்த சமூகம் அடையாளப்படுத்தப்படுகிறவர்களை பார்த்துச் சொன்னார் அது தலித் மற்றும் பழங்குடியினருக்கு பொருந்தாது.
அந்த கேள்வி பிராமணர், சத்திரியர், வைசியர், என்பவர்களுக்கு பொருந்தாது. இந்துச் சமூகத்தில் உள்ள நான்காம் வர்ணத்தைச் சார்ந்த சூத்திரர்களுக்கு அந்த கேள்வி எழுப்பப்படுகிறது. ஏனென்றால் அந்த வர்ணாசிரம தர்மம் வெளிப்படையாக சொல்லுகிறது. சூத்ரார் என்றால் அப்பன் பெயர் தெரியாதவர்கள், வேசி பிள்ளைகள் இதைத்தான் அவர் மேற்கோள் காட்டி இருக்கிறார்.
லிங்காயத்துக்கள் நாங்கள் இந்துக்கள் இல்லை என்று எப்படி துணிச்சலாக சொல்லுகிறார்களோ, நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முன் வந்திருக்கிறார்களோ. அப்படி சூத்திரர்களாக இருப்பவர்களும் முன்வர வேண்டும் என்று பெரியார் பேசியதை அம்பேத்கர் பேசியதை அவர் மீண்டும் சொல்லி இருக்கிறார் அதைத்தான் விடுதலைச் சிறுத்தைகளும் தொடர்ந்து சொல்கிறோம். நானும் அதை பேசி வருகிறேன் ஆனால் இவர்கள் சனாதனிகள் குறிப்பாக சூத்திரன் அல்லாதவர்களுக்கு ஏன் கோபம் பொத்துக் கொண்டு வருகிறது. சூத்திரர்களாக இருப்பவர்கள் இந்த கேள்வி எழுப்ப வேண்டும் எச். ராஜா சூத்திரரா என்ற கேள்வியை எழுப்பு கடமைப்பட்டிருக்கிறோம். உங்கள் நம்பிக்கையான வர்ணாசிரம தர்மத்தின் படி சூத்திரன் அல்லாத எச்.ராஜாவுக்கு ஏன் ஆத்திரம் வருகிறது.
ராஜா அவர்களின் விளக்கம் என்பது சூத்திரங்களை பார்த்து சொல்லுகிற கருத்து நான்கு வர்ணங்களில் நான்காவது வர்ணமாக 'இருக்கிற கீழ் சாதி என்று சொல்லப்படுகிற தலித் அல்லாத பழங்குடி அல்லாத பிராமணர் அல்லாத சத்திரியர் அல்லாத வைசியர் அல்லாத ஒட்டுமொத்தமாக ஏதோ இந்துக்களின் பாதுகாவலர்கள் இவர்கள்தான் என்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை ஒரு மாயையை உருவாக்க பார்க்கிறார்கள். இவர்களை வட இந்தியர்கள் வேண்டுமானால் புரிந்து கொள்வதில் சிக்கல் இருக்கலாம் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் இந்த கும்பலின் சதியை இவர்களின் சித்து விளையாட்டை இவர்களின் சூழ்ச்சியை தெளிவாக புரிந்து வைத்திருக்கிறோம் இவர்களின் ஜம்பம் தமிழ்நாட்டில் பலிக்காது இவர்களின் அவதூறு முயற்சிகள் எடுபடாது” என்றார்.