Somy Ali about Salman Khan : 8 ஆண்டுகள் நரகம்; அசிங்கமானவள் என பட்டம்: சல்மான் கான் குறித்து பகீர் தகவலை வெளியிட்ட பாலிவுட் நடிகை!

என் வாழ்க்கையில் சல்மான் கான் உடனான அந்த எட்டு ஆண்டுகள் நரகமானது. பரபரப்பை ஏற்படுத்திய சோமி அலியின் சோசியல் மீடியா போஸ்ட்

Continues below advertisement


கிருஷ்ணன் அவதார், அந்த், அண்டோலன், மாஃபியா உள்ளிட்ட பாலிவுட் படங்களில் நடித்துள்ளவர் பாகிஸ்தானிய நடிகை சோமி அலி. இவரும் பாலிவுட் சூப்பர் ஸ்டார்களில் ஒருவராக விளங்கும் நடிகர் சல்மான் கானும் 1991ஆம் ஆண்டு முதல் 1999ஆம் ஆண்டு வரை காதலித்து வந்த நிலையில் இவர்களுக்கு இடையில் சமீபத்தில் பிரேக் அப் ஆனதை அடுத்து சோமி அலி ஒரு பகீர் தகவலை சோசியல் மீடியா மூலம் பகிர்ந்துள்ளார்.

Continues below advertisement

 

 

அசிங்கமானவள் என பட்டம் :

ஏராளமான பிரபலமான நடிகைகளை தனது காதல் லிஸ்டில் வைத்து இருந்த சல்மான் கானின் முன்னாள் காதலியான சோமி அலி சல்மான் கான் உடனான 8 வருட காலமும் நரகம் என குற்றம் சாட்டியுள்ளார். பல சமயங்களில் சல்மான் கான் தன்னை  ஏமாற்றியதை பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார். தன்னை ஒரு மோசமான பெண், அசிங்கமானவள் என கேவலப்படுத்தியுள்ளார் என ஒரு குறிப்பை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். 

டெலீட் செய்த காரணம் :

ஏற்கனவே பல முறை சோமி அனுபவித்த வன்முறை பற்றி பகிர்ந்து பின்னர் அவரே அதை டெலீட் செய்துவிடுவார். அதற்கான காரணத்தை தற்போது கூறியுள்ளார். பலாத்காரம் மற்றும் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்தி வரும் நிர்வாக இயக்குனராக இது போன்ற அவதூறான பதிவுகளை வெளியிடுவது பிடிக்காததால் அதை நான் நீக்கினேன் என்றார்.

 


நரகத்தில் எட்டு ஆண்டுகள் :

சல்மான் கான் உடனான எட்டு ஆண்டு கால வாழ்க்கை மிகவும் மோசமானது. என்னை அசிங்கமான முட்டாள் என கேவலப்படுத்தினார். ஒரு நாளும் என்னை மதித்ததில்லை, பொது இடங்களில் என்னை அவரின் காதலி என அடையாளம் காட்டியதில்லை. அவரின் நண்பர்களுக்கு மத்தியில் என்னை அவமதித்து இடைவிடாது திட்டுவார். அவர் என்னை நடத்திய விதத்தால், என்னை மதிக்கும், நன்றாக கவனித்து கொள்ளும், நேசிக்கும் ஒருவரை தேடுவது தான் என்னுடைய ஆசையாக இருந்தது. இதை சொல்வதில் எனக்கு எந்தவித தயக்கமும் இல்லை. 

பெண்களை ஏமாற்றுபவர்கள் தான் ஆண்கள் :

இந்த ஆண்கள் என்னை பயன்படுத்துகிறார்கள் என்பதை நான் உணரவில்லை. நான் அதை என் எதிர்காலம் என நினைத்து கொண்டு இருந்தேன். இதை நன்கு அறிந்த சல்மான் கான் நான் ஒரு ஆண், ஆண்களால் மட்டுமே பெண்களை ஏமாற்ற முடியும் என கூறி என்னை காயப்படுத்தும் தைரியம் அவருக்கு இருந்தது. உடல் ரீதியாகும் மன ரீதியாகவும் நான் அதிகமான துன்பங்களை அனுபவித்தேன் என தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார் சோமி அலி.

Continues below advertisement