திரையுலகின் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது மகள் ஐஸ்வர்யா. சமீபத்தில் இவருக்கும் தனுஷிற்கும் இடையே விவகாரத்தான கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இதனையடுத்து பேசிய தனுஷின் அப்பாவான கஸ்தூரிராஜா, சாதரண குடும்ப சண்டைதான் என்று விளக்கமளித்தார். ஆனால் தனுஷூம் சரி, ஐஸ்வர்யாவும் சரி இந்த விவகாரத்தில் முடங்கிவிடவில்லை.
தத்தமது வழிகளில் தங்களது பயணத்தை தொடர்ந்தனர். தனுஷ் வாத்தி படத்தில் பிசியாக, ஐஸ்வர்யா முசாபிர் பாடல் வேலைகளை கவனிக்க சென்றுவிட்டார். இதனிடையே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் அதிலிருந்தும் மீண்டு வந்தார். தற்ப்போது முசாபிர் மேக்கிங் உள்ளிட்டவை குறித்தான பதிவுகளை வெளியிட்டு வரும் ஐஸ்வர்யா அந்த பாடலை பிரோமோட் செய்து வருகிறார்.
இதற்கிடையே ஐஸ்வர்யா சிம்புவுடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது ஐஸ்வர்யா ராகவா லாரன்ஸை சந்தித்து பேசியிருக்கிறார். அது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “ஒரு சுவாரஸ்சியமான விஷயம் வந்துகொண்டிருக்கிறது. லாரன்ஸ் அண்ணாவை சந்தித்த பிறகு, எனது மூளை அதிவேகத்தில் ஓட ஆரம்பித்திருக்கிறது. வொர்க்மோடு ஆன்” என்று பதிவிட்டுள்ளார்.
இந்தப்பதிவை பார்த்த ரசிகர்கள், ஐஸ்வர்யா அடுத்ததாக லாரன்ஸை இயக்கப்போகிறாரோ என கேள்வி எழுப்பி வருகின்றனர். முன்னதாக 3 படத்தில் இயக்குநராக அறிமுகமான ஐஸ்வர்யா, வை ராஜா வை படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது.