கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அவரது சொந்த ஊரான சிவகாசியில் பரிதாபங்கள் சுதாகருக்கு திருமணம் நிச்சயக்கப்பட்ட நிலையில்

  இன்று திருமணம் நடந்துமுடிந்துள்ளது. இந்தத்தம்பதிக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பான புகைப்படங்களும் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 






காமெடியன்களாக ஆக  வேண்டும் என்ற கனவோடு வந்த கோபியும் சுதாகரும் ஆரம்பத்தில் பல்வேறு தொலைக்காட்சிகளில் காமெடியர்களாக வர முயற்சி செய்தனர்.




ஆனால் எங்கும் அவர்களுக்கு சரியான வாய்ப்பு கிடைக்காத நிலையில்,மெட்ராஸ் சென்ட்ரல் யூடியூப் சேனலில் ‘ பரிதாபங்கள்’ என்ற பெயரில் காமெடி வீடியோக்களை வெளியிட்டனர்.


வரவேற்பை பெற்ற காமெடி வீடியோக்கள்: 


இவர்களது காமெடி வீடியோக்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற, ஒருகட்டத்தில் வீடியோக்கள் மில்லியன் வியூஸ்களை எட்டியது. அதனைத்தொடர்ந்து  ‘பரிதாபங்கள்’ என்ற சேனலை தொடங்கிய இவர்கள் அதில் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். ட்ரெண்டிங்கிற்கு ஏற்றவாறு கான்செப்ட்களை பிடிக்கும் இவர்கள், பரிதாபங்கள் என்ற பெயரில் பல்வேறு தலைப்புகளில் வீடியோவை வெளியிட்டு பிரபலமாகினர்.


இதில் கிடைத்த பிரபலம் அவர்களை சினிமாவுக்கும் அழைத்து சென்றது.  ‘மீசையை முறுக்கு’,  ‘மெர்சல்’,  ‘சோம்பி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளனர்.  இதனிடையே குரூப் ஃபண்டிங் மூலம் 6.5 கோடி திரட்டிய இவர்கள்  ‘மணி கம் டுடே’ ‘ கோ டுமாரோ’ உள்ளிட்ட படங்களை ஆரம்பித்தனர். ஆனால் பல்வேறு காரணங்களால், அந்தப் படங்கள் முடியவில்லை. ஆனால் இந்தப்படங்கள் விரைவில் முடிக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண