தமிழ் திரையுலகில் மிகவும் முக்கியமான பாடகர்களில் ஒருவர் சங்கர் மகாதேவன். இவர் மும்பையில் ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார். சிறு வயது முதல் கர்நாடக சங்கீதம் மற்றும் ஹிந்துஸ்தானி சங்கீதம் ஆகிய இரண்டையும் கற்றுள்ளார். பொறியியல் பட்டப்படிப்பை முடித்த பிறகு ஒரு தனியார் நிறுவனத்திலும் பணிபுரிந்து வந்துள்ளார். அதன்பின்னர் அந்த வேலையை விட்டு பாடகராக அறிமுகமாகி பல வெற்றி பாடல்களை கொடுத்துள்ளார். இவருடைய இனிமையான குரலில் கேட்க கூடிய தமிழ் பாடல்கள் என்னென்ன?

1. என் அன்பே:

சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையில் சங்கர் மகாதேவனின் குரல் மற்றும் பாடலின் வரிகள் அவ்வளவு சிறப்பாக அமைந்திருக்கும். 

"விழி பட்ட இடம் இன்று உளி பட்ட சிலையாகஇதுதானோ காதல் என்று அறிந்தேனடிபுது பார்வை நீ பார்த்து புது வார்த்தை நீ பேசி..."

 

2. உப்பு கருவாடு:

நடிகர் அர்ஜூன் நடிப்பில் வெளியான முதல்வன் திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்று இருக்கும். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருப்பார். இந்தப் பாடல் வெளியான போது பட்டி தொட்டி எங்கும் பரவி நல்ல ஹிட் அடித்தது. 

" கொரவ மீனுகுதிக்கிற ஆத்துக்குள்ளகோரப்புல்லு முளைக்கிறசேத்துக்குள்ள என் கூடசகதிக்கூத்து ஆடுதைதைதைதைதை அடிஒத்தத் துணி உடுத்திக்குளிப்போமா வெக்கம்தள்ளி வை வை...."

 

3. வராக நதிக் கரை ஓரம்:

சங்கமம் திரைப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான்- சங்கர் மகாதேவன் கூட்டணியில் அமைந்த மற்றொரு சிறப்பான ஹிட் பாடல் இது. இந்தப் பாடலின் வரிகள் மற்றும் அதை காட்சிப்படுத்தலும் சிறப்பாக அமைந்திருக்கும். இந்தப் படத்தில் எல்லா பாடல்களும் ஹிட் அடித்தது. அதில் இது ஒரு சிறப்பான பாடலாக அமைந்தது. 

"பஞ்சவா்ணக்கிளி நீபறந்த பின்னாலும் அஞ்சுவா்ணம் நெஞ்சில் இருக்குபஞ்சவா்ணக்கிளி நீபறந்த பின்னாலும் அஞ்சுவா்ணம் நெஞ்சில் இருக்கு...."

 

4. நீயா பேசியதே:

விஜய் நடிப்பில் வெளியான திருமலை திரைப்படத்தில் இந்தப் பாடல் அமைந்திருக்கும். இப்பாடலுக்கு வித்யாசாகர்  இசையமைத்துள்ளார். இந்தப் பாடல் சங்கர் மகாதேவன் குரலில் பெரிய ஹிட் அடித்தது. 

"வேரில் நான்அழுதேன் என் பூவும்சோகம் உணரவில்லைவேஷம் தரிக்கவில்லைமுன்நாளில் காதல்பழக்கமில்லை உனக்கென்றே..."

 

5. என்ன சொல்ல போகிறாய்:

சங்கர் மகாதேவனுக்கு 2000ஆம் ஆண்டு சிறந்த பாடகருக்கான தேசிய விருதை பெற்று தந்த பாடல் இது. அஜித் நடிப்பில் வெளியான கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் திரைப்படத்தில் இப்பாடல் இடம்பெற்றுள்ளது. இதில் ஏ.ஆர்.ரஹ்மான் சங்கர் மகாதேவன் கூட்டணியில் அமைந்த சிறப்பான பாடல்களில் இதுவும் ஒன்று. 

" நீ ஒன்று சொல்லடிபெண்ணே இல்லை நின்றுகொல்லடி கண்ணே எந்தன்வாழ்க்கையே உந்தன் விழிவிளிம்பில்என்னைத் துரத்தாதேஉயிா் கரையேறாதே..."

 

இவை தவிர மன்மத ராசா, ஒ மாமா போன்ற பல ஹிட் அடித்த பாடல்களை சங்கர் மகாதேவன் தன்னுடைய குரலில் பாடியுள்ளார். 

மேலும் படிக்க:இரவு நேரத்தை இனிமையாக்கும் மலேசியா வாசுதேவனின் ப்ளே லிஸ்ட் !