தமிழ் திரையுலகில் எஸ்பி. பாலசுப்ரமணியத்திற்கு இணையாக பாடல்கள் பாடி வந்தவர் மலேசியா வாசுதேவன் தான். இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டிருந்தாலும் மலேசியாவில் குடிபெயர்ந்து வசித்து வந்துள்ளார். தமிழ் திரையுலகில் பாடகராக வரும் போது வாசு என்கிற பெயரில் பலர் இருந்ததால், மலேசியா என்கிற அடைமொழியோடு மலேசியா வாசுதேவன் ஆனார். ஜி.கே.வெங்கடேஷ் இசையில் பொல்லாத உலகில் ஒரு போராட்டம் படத்தில் ‛பாலு விக்கிற பத்தம்மா...’ என்ற பாடல் தான் அவரது முதல் பாடல். அதன்பின்னர் தமிழ் சினிமாவில் இவருக்கு என்று ஒரு தனி இடமே உண்டு. இப்படிப்பட்ட மலேசியா வாசுதேவனின் சிறப்பான பாடல்கள் என்னென்ன?


1. கொடைக்கால காற்றே:


பன்னீர் புஷ்பங்கள் திரைப்படத்தில் இந்தப் பாடல் அமைந்திருக்கும். இளையராஜாவின் இசையில் மலேசியா வாசுதேவனின் குரலும் அவ்வளவு சிறப்பாக அமைந்திருக்கும். அத்துடன் இந்தப் பாடலில் வரும் காட்சிகளும் அருமையாக இருக்கும். 


"ஏதோ ஒன்றைத் தேடும்
நெஞ்சம் இங்கே கண்டதே
ஏங்கும் கண்ணில் தோன்றும்
இன்பம் இங்கே என்றதே


வெண்மலை அருவி
பன்னீர் தூவி
பொன்மலை அழகின்
சுகம் ஏற்காதோ.."


 



2. வா வா வசந்தமே:


ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'புதுகவிதை' திரைப்படத்தில் இந்தப் பாடல் அமைந்திருக்கும். இளையராஜா- மலேசியா வாசுதேவன் கூட்டணியில் அமைந்த மற்றொரு சிறப்பான பாடல் இது. இதன் வரிகளும் சிறப்பாக அமைந்திருக்கும். 


"பாவை பூவை
காலங்கள் காக்கும்
அந்த காதல் ரணங்களை
மறைத்து மூடுவேன்
சிரித்து வாழ்த்துவேன் ஓ.."


 



3. ஆயிரம் மலர்களே:


நிறம் மாறாத பூக்கள் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் இது.  இந்தப் பாடலுக்கும் இளையராஜா இசையமைத்திருப்பார். மலேசியா வாசுதேவன், ஜென்சி ஆகியோர் இப்பாடலை பாடியிருப்பார்கள். இப்பாடலிலும் இசை மற்றும் வரிகள் பாடலுக்கு அவ்வளவு அழகாக பொருத்தமாக இருக்கும். 


"வானிலே வெண்ணிலா
தேய்ந்து தேய்ந்து வளரலாம்
வானிலே வெண்ணிலா
தேய்ந்து தேய்ந்து வளரலாம்
மனதில் உள்ள கவிதை கோடு மாறுமோ….
ராகங்கள் நூறு பாவங்கள் நூறு
என் பாட்டும் உன் பாட்டும் பொன் அல்லவோ..."


 



4. ஒரு கூட்டு கிளியாக:


படிக்காதவன் திரைப்படத்தில் அமைந்த சிறப்பான பாடல் இது. இளையராஜா-மலேசியா வாசுதேவன் கூட்டணியில் காலத்தால் அழியாத பாடல்களில் இதுவும் ஒன்று. சிவாஜியின் நடிப்பு பாடலுக்கு மேலும் அழகு சேர்த்திருக்கும். அத்துடன் பாடலின் வரிகளும் நன்றாக அமைந்திருக்கும். 


"செல்லும் வழி
எங்கெங்கும் பள்ளம்
வரலாம் உள்ளம்
எதிர்பாராமல் வெள்ளம்
வரலாம்


நேர்மை அது
மாறாமல் தர்மம் அதை
மீறாமல் நாளும் நடை
போடுங்கள் ஞானம்
பெறலாம்..."


 



5. காதல் வைபோகமே:


கங்கை அமரன் இசையில் வெளியான திரைப்படம் 'சுவர் இல்லாத சித்திரங்கள்'. இந்தப் படத்தில் காதல் வைபோகமே ஜானகி மற்றும் மலேசியா வாசுதேவனின் குரலில் அமைந்திருக்கும். இந்த பாடலின் இசை மற்றும் வரிகள் பாடலுக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் இருக்கும். 


"கோடை காலத்து தென்றல் குளிரும் பௌர்ணமி திங்கள்
வாடை காலத்தில் கூடல் விளையாடல் ஊடல்
வானம் தாலாட்டு பாட மலைகள் பொன் ஊஞ்சல் போட...."


 



இவை தவிர மலேசிய வாசுதேவன் குரலில் பல சிறப்பான பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றை அடுக்க ஒருநாள் போதாது என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க:இரவு நேரத்தை அழகாக்கும் ஜி.வி.பிரகாஷ் ப்ளே லிஸ்ட் !