இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி கடந்தாண்டு, சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து ஃபார்மேட்களில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார்.


இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடர், கொரோனா பரவலால் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. பின், செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் மீதமுள்ள போட்டிகள் நடைபெறும் என அறிவிப்பு வெளியானது.






இந்நிலையில், தோனி தனது குடும்பத்தாரிடம் நேரத்தை கழித்து வருகிறார். அதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவ்வப்போது சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது. 


சமீபத்தில், புது ஸ்டைலில் இருக்கும் தோனியின் புகைப்படம் ஒன்று வெளியானது. அந்தப் புகைப்படத்தில், முறுக்கு மீசையுடன் தோனி வலம் வருகிறார். அவருடன் அவருடைய மகள் ஸீவாவும் உடன் உள்ளார். இந்தப் புகைப்படம் சமூகவலைதளத்தில் டிரெண்டானது.


இப்போது தோனியின் இன்னொரு படம் டிரெண்டானது மட்டுமல்லாமல் நெட்டிசன்களின் டிராலுக்கும் ஆளாகியது. அந்த புகைப்படத்தில், ‘PLANT TREES SAVE FORESTS’ என்ற மெசேஜ் சொல்வது இருந்தது. இந்த புகைப்படத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தனர்.



இப்புகைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் லைக்ஸ்கள் அள்ளினாலும், இன்னொரு புறம் ரசிகர்கள் டிரால் செய்யத் தொடங்கிவிட்டனர். “மரத்தாலான பலகையில் எழுதப்பட்டிருக்கும் வாசகத்தை காண்பித்து மரங்கள் நடவேண்டும் என அட்வைஸா?” என தோனியை கலாய்த்து வருகின்றனர்.


சமூகவலைதளத்தில் தோனியை கலாக்கத் தொடங்கியவுடன், அவர் தங்கியிருந்த ரெசார்ட் இதற்கு பதிலளித்துள்ளது. அந்த ரெசார்டின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதற்கான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.






அதில், “மர ஆலைகளால் வெளியேற்றப்படும் கழிவுகளை கொண்டே இந்த மரத்தாலான பலகைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பலகைகளை தயாரிக்க மரங்களை அழிக்கவில்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.