தமிழ் சினிமாவில் தற்போது உள்ள மிகச்சிறப்பான இயக்குநர்கள் பட்டியலில் வெற்றிமாறனும் ஒருவர். தனுஷ் நடிப்பில் வெளியான பொல்லாதவன் திரைப்படம் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் இவர் அறிமுகமானார். அதன்பின்னர் தன்னுடைய 2ஆவது படமான 'ஆடுகளம்' திரைப்படத்திற்கு தேசிய விருதை பெற்று அசத்தினார். அத்துடன் அந்த திரைப்படம் 6 தேசிய விருதை வென்று பெருமளவில் ஹிட் அடித்தது. அதைத் தொடர்ந்து விசாரணை, வட சென்னை என பல ஹிட் படங்களை வெற்றிமாறன் தொடர்ந்து அளித்து கொண்டே வருகிறார். இடையில் தயாரிப்பாளராகவும் ஒரு சில படங்களை தயாரித்து வருகிறார்.
இந்நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான படங்களில் அமைந்த சிறப்பான பாடல்கள் என்னென்ன?
1. மின்னல்கள் கூத்தாடும்:
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான முதல் திரைப்படம் பொல்லாதவன். இந்தத் திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் பாம்பே ஜெயஶ்ரீ குரலில் இந்தப் பாடல் அமைந்திருக்கும்.
"காதலும் ஒரு
வகை போதை தானே
உள்ளுக்குள் வெறி
ஏற்றும் பேய் போல
ஏன் இந்த தொல்லை
என்று தள்ளி போனாய்
புன்னகை செய்து கொஞ்சும்
தாய் போல..."
2. அய்யோ அய்யோ நெஞ்சு:
தனுஷ்-வெற்றிமாறன்-ஜிவி பிரகாஷ் கூட்டணியில் அமைந்த மற்றொரு சிறப்பான திரைப்படம் ஆடுகளம். இந்தப் படத்தில் பாடல்கள் அனைத்தும் மிகவும் சிறப்பாக அமைந்திருக்கும். அதில் எஸ்பி பால்சுப்ரமணியம் மற்றும் அவரது மகன் எஸ்பிபி சரண் பாடியிருக்கும் இந்தப் பாடல் காலத்தால் அழியாத பாடல்களில் ஒன்று.
"மழைச்சாரல் விழும்
வேளை மண்வாசம் மணம் வீச
உன் மூச்சு தொடவே நான் மிதந்தேன்
ஹோ கோடையில
அடிக்கிற மழையா நீ என்ன
நனைச்சாயே ஈரத்தில
அணைக்கிற சுகத்த
பாா்வையிலே கொடுத்தாயே..."
3. என்னடி மாயாவி:
வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணியில் அமைந்த அடுத்த வெற்றி திரைப்படம் வட சென்னை. இந்தத் திரைப்படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் சித் ஶ்ரீராம் குரலில் அமைந்த சிறப்பான பாடல் இது.
"தினம் கொட்டி தீக்கவா
ஒரு முட்டாள் மேகமா
உன்ன சுத்தி வாழவா
உன் கொட்டா காகமா பறவையே
பறந்து போவமா மரணமே
மறந்து போவமா
உப்பு காத்துல
இது பன்னீர் காலமா..."
4. எள்ளு வய பூக்கலையே:
"கல்லாக நின்னாயோ
கால் நோக நின்னாயோ
கண்ணே நீ திரும்பி வரணும்
வீட்டுக்கு
மல்லாந்து போனாலும்
மண்ணோடு சாஞ்சாலும்
அய்யா நீ பெருமை சாதி
சனத்துக்கு..."
5. ஒத்த சொல்லால:
தனுஷ்-வெற்றிமாறன்-ஜிவி பிரகாஷ் கூட்டணியில் அமைந்த மற்றொரு சிறப்பான திரைப்படம் ஆடுகளம். இந்தப் படத்தில் பாடல்கள் அனைத்தும் மிகவும் சிறப்பாக அமைந்திருக்கும்.அதில் குறிப்பாக தேசிய விருதை வாங்கி தந்த பாடல் இது. பாடகர் வேல் முருகன் குரலில் அமைந்த சிறப்பான பாடல் இது.
"என் பவுடா் டப்பா
தீா்ந்து போனது அந்த
கண்ணாடியும் கடுப்பு ஆனது
நான் குப்புறத்தான் படுத்து கெடந்தேன்
என்ன குதிர மேல ஏத்தி விட்டாயே
ஒன்னும் சொல்லாம
உசுர தொட்டாயே மனச
இனிக்க வெச்ச சீனி மிட்டாயே.."
இவ்வாறு பல வெற்றி பாடல்களை தமிழ் சினிமாவிற்கு இயக்குநர் வெற்றிமாறன் தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: “வீடும் பெருசு... கலாட்டாவும் பெருசு” - வெளியானது பிக் பாஸ் ப்ரோமோ!