ஜெயிலர் படத்தில் இடம்பெற்றுள்ள காவலா பாடலுக்கு பிரபல சமூக வலைத்தள பிரபலம் அமலா ஷாஜி ஆடியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஜெயிலர். இந்தப் படத்தில் ரஜினிகாந்த், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, மோகன்லால், ஜாக்கிஷெராஃப், சிவராஜ் குமார், யோகிபாபு என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இப்படியான நிலையில் ரிலீசுக்கு இன்னும் ஒரு மாதத்திற்கு குறைவான நாட்கள் மட்டுமே உள்ளதால் அடுத்தடுத்து ஜெயிலர் படத்தின் அப்டேட்டுகள் வெளியாகி வருகிறது.
சமீபத்தில் தான் இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், கடந்த ஜூலை 6ஆம் தேதி முதல் பாடலாக காவாலா வெளியாகி இருந்தது. தமன்னாவின் அசத்தலான நடனத்தில் உருவான இப்பாடல் பட்டித் தொட்டியெங்கும் பிரபலமாக உள்ளது.
இயக்குனரும் பாடலாசிரியருமான அருண் ராஜா காமராஜ் எழுதிய இந்தப் பாடலை ஷில்பா ராவ் பாடியுள்ளார். இந்தப் பாடல் பிரபலமான நிலையில் பலரும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் ரிலீஸ் வீடியோக்கள் எடுத்து பதிவிட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து ஜெயிலர் படத்தில் இரண்டாவது பாடலாக ஹுக்கும் நாளை வெளியாக உள்ளது. இதற்கான முன்னோட்டம் வீடியோ நேற்று வெளியானது. இதில் ரஜினியின் பஞ்ச் டயலாக் வசனங்கள் இடம் பெற்றிருந்தது.
இப்படியான நிலையில் பிரபல சமூக வலைத்தள பிரபலம் அமலா சாட்சி காவலா பாட்டுக்கு ரீல் செய்த வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவரின் வீடியோவை பார்த்த பலரும், அமலா ஷாஜி குட்டி தமன்னாவாக மாறிவிட்டார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.