கடந்த 2018 ஆம் ஆண்டு நடிகர் எஸ்.ஜே.சூர்யா, அமிதாபச்சன் நடிப்பில் உயர்ந்த மனிதன் திரைப்படம் உருவாக இருப்பதாக அறிவிப்பு வெளியானது. தமிழில் ‘ மச்சக்காரன்’ ‘கள்வனின் காதலி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் தமிழ்வாணன் இயக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டது. அமிதாபச்சனின் முதல் நேரடி தமிழ்படமாக உருவான இந்தப்படம் Tera Yaar Hoon Mein பெயரில் ஹிந்தியிலும் எடுக்கப்பட்டு வந்தது. 






படப்பிடிப்பு நிறுத்தம் 


கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட நிலையில், படப்பிடிப்பு தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில் படத்தயாரிப்பாளருக்கும்,  அமிதாபச்சனுக்கு இடையே பிரச்னை ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இது குறித்து எஸ்.ஜே.சூர்யாவும் செய்தி ஒன்றை வெளியிட்டு இருந்தார். 






மீண்டும் தொடங்கும் படப்பிடிப்பு 


இந்தப்படம் நிறுத்தப்பட்டது குறித்து பல பேட்டிகளில் எஸ்.ஜே.சூர்யா வருத்தமும் அடைந்தார். இந்த நிலையில் இந்தப்படம் மீண்டும் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின் படி, படத்தின் தயாரிப்பாளர்கள் படத்தின் உரிமையை புதிய தயாரிப்பாளரிடம் கொடுத்துள்ளதாகவும், அதனால் படத்தின் அமிதாப் பச்சன் நடிப்பதில் எந்த பிரச்னையும் இல்லை எனவும் கூறப்படுகிறது இதனால், உயர்ந்த மனிதன் திரைப்படம் விரைவில் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 






எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் அண்மையில் வெளியாகியிருந்த மாநாடு படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.