கேரள மாநிலம் திருவனந்தபுரம் மணக்காடு பகுதியை சேர்ந்தவர் கிரீஷ் (58).மனநல மருத்துவரான இவர் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானார். கடந்த 2017 ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தை சேர்ந்த 8 ஆம் வகுப்பு மாணவன் (13) படிப்பில் கவனக்குறைவாக இருந்ததாக சொல்லி அவரது பெற்றோர் சிகிச்சைக்காக  கிரீஷிடம் அழைத்து சென்றுள்ளனர்.


சில்மிஷத்தில் ஈடுபட்ட மருத்துவர் 


அப்போது பெற்றோரை வெளியே இருக்க வைத்து விட்டு, மாணவனை மட்டும் கிரீஷ் மருத்துவர் அறைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அவர் மாணவனிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து அவ்வப்போது சிகிச்சைக்கு வர வேண்டும் கூறிய மருத்துவர் தொடர்ந்து மாணவனிடம் ஓரின சேர்க்கையிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இது மட்டுமன்றி இது குறித்து யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டி உள்ளார். இதனால் அச்சப்பட்ட மாணவன், இது குறித்து யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார். 


மாணவனின் நடவடிக்கையில் மாற்றம் 


மாணவன் நடவடிக்கையில் மாற்றங்களை கவனித்த அவரது பெற்றோர், விசாரித்ததில் மருத்துவரின் அத்துமீறிய நடவடிக்கை வெளியே தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து மாணவரின் பெற்றோர் திருவனந்தபுரம் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். அதனை தொடர்ந்து கிரீஷ் மீது வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் அவரை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த திருவனந்தபுரம் அதிவிரைவு சிறப்பு நீதிமன்றம், மருத்துவர் கிரிஷூக்கு 6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 1 லட்சம் அபராதமும் விதித்தது. 


மருத்துவர் கிரிஷ் மீது ஏற்கனவே சிகிச்சைக்கு வந்த மாணவனை மிரட்டி ஓரின சேர்க்கையில் ஈடுபட்டதாகவும்,  திருமணமான பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் புகார்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.