ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சர்வைவர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் VJ பார்வதி. வேடர்கள் அணியில் இருந்து, அணியையும், சக போட்டியாளர்களையும் ஒரு வழியாக்கி, தனியாளாக துணிந்து அனைவரையும் துவம்சம் செய்தவர். வேடர்கள் அணியில் எலிமினேசன் செய்யப்பட்டு, மூன்றாம் உலகம் தீவில் காயத்ரியுடன் சில வாரங்கள் தங்கி, பின்னர் அடுத்தடுத்த டாஸ்குகளில் இறுதியில் தோற்று போட்டியிலிருந்து வெளியேறினார் VJ பார்வதி.

Continues below advertisement

Continues below advertisement

சரி... வெளியே வந்து பார்வதி பல விசயங்களை போட்டு உடைப்பார் என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில், சர்வைவர் விதிகளுக்கு கட்டுப்பட்டு அவர் அமைதி காத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. இருப்பினும் அவருக்கு நிகழ்ச்சியால் எந்த பாதிப்பும் இல்லை. நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களால் தான் பாதிப்பு. தன்னை பலர் ஓரங்கட்டிவிட்டனர் என்று தான் அவர் குற்றம்சாட்டினார். எனவே அவரது குற்றச்சாட்டுகளை கிட்டத்தட்ட கேமராக்கள் முன்பே நேருக்கு நேர் கூறிவிட்டார். 

இந்நிலையில் VJ பார்வதி தனது இன்ஸ்டாவில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதை பார்த்த பலருக்கும் அதிர்ச்சி. ஆமாம்.. RJ டூ VJ என்று ப்ரொமோஷன் ஆன பார்வதி, தற்போது VJ டூ நடிகையாக புதிய அவதாரம் எடுத்திருக்கிறார். ஆம்... நடிகர் ஹிப்ஆப் தமிழா நடித்து வெளியாகியிருக்கும் சிவக்குமாரின் சபதம் படத்தில் நடித்திருக்கிறார் VJ பாரு. இது உண்மையில் பெரிய சஸ்பென்ஸ் தான். இதுவரை அவர் பற்றிய விபரங்கள் வெளிவராத நிலையில் அவரே தன்னுடைய இன்ஸ்டாவில் அதை வெளியிட்டுள்ளார். 

பாரு பதிவு... அவ்வளவு எளிதில் இருக்குமா என்ன.... ஹிப்ஆப் தமிழா ஆதி மற்றும் ஐஸ்வர்யா உடன் எடுத்துள்ள அந்த படத்தில் கதாநாயகி போலவே அவரும் அருகில் நிற்கிறார். திருமண அலங்காரம் போன்ற பின்னணியில் அவர் நிற்பதால், ‛ஏய்... நான் இன்னும் சிங்கிள் தான்... எனக்கு ஒரு முறை கூட திருமணம் ஆகவில்லை...’ என்று நக்கலாய் அந்த பதிவில் கமெண்ட் செய்துள்ளார் VJ பார்வதி,’. 

அத்தோடு விசயத்திற்கும் வந்துள்ளார். தமிழ் சினிமாவில் தனது அறிமுகப்படமாக சிவக்குமாரின் சபதத்தில் நடித்துள்ளதாகவும், அனைவரும் தியேட்டரில் படத்தை பார்த்து ஆதரவு தருமாறும் கேட்டுக் கொண்டுள்ளார் பாரு. பாருக்காக ஒரு தரம் தியேட்டரில் பாருங்களேன்!