பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘எதற்கும் துணிந்தவன்’ எனப் இதனை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியுள்ளார். இந்தப் படம் சூர்யாவின் 40 வது திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இந்தத் திரைப்படத்தில்  சத்யராஜ், ப்ரியங்கா மோகன், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் சூர்யாவுடன் நடித்து வருகின்றனர்.  இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது காரைக்குடி பகுதிகளில் நடைபெற்ற நிலையில்,  சென்னையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதனை சமீபத்தில் இயக்குநர் பாண்டிராஜன் உறுதிப்படுத்தியிருந்தார், இந்த நிலையில் படத்தின் முதல் வீடியோ கிளிம்ஸை படக்குழுவினர் நேற்று வெளியிட்டனர். இமானின் மாஸ் பின்னணி இசையில் ஓடிய அந்த காட்சிகள் சூர்யா ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்தது.







முன்னதாக படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பாடல் ஒன்றை எழுதுவதாக செய்திகள் வெளியான நிலையில். அதனை உறுதிப்படுத்தும் விதமாக நேற்று வெளியான எதற்கும் துணிந்தவன் டைட்டில் கார்டில் பாடல் வரிகளை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் யுக பாரதி மற்றும் விக்னேஷ் சிவனும் படத்திற்கான பாடல்களை எழுதியுள்ளனர். பாண்டிராஜ் இறுதியாக இயக்கிய நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்திருந்தார்.மேலும் அந்த படத்திலும் ’காந்த கண்ணழகி’ என்ற ஒரு பாடலை எழுதியிருந்த நிலையில் அதன் மூலம் சூர்யாவிற்கு பாடல் எழுதுவதற்கான வாய்ப்புகள் கிடைத்திருக்கலாம் என கருதப்படுகிறது. முன்னதாக கோலமாவு கோகிலா படத்தில் ‘எனக்கு கல்யாண வயசுதான் வந்திருச்சு’,ஆதித்யா வர்மா திரைப்படத்தில் ஒரு பாடல் , இறுதியாக வெளியான டாக்டர் திரைப்படத்தில் , செல்லம்மா, ஓ பேபி என இரு பாடலை எழுதியிருந்தார் சிவகார்த்திகேயன் என்பது குறிப்பிடத்தக்கது.




சூர்யா, வெற்றிமாறன் கூட்டணியில மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகி வரும் படம் ‘வாடிவாசல்’.  சமீபத்தில் இந்த  படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளங்களை கலக்கின. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை கொண்டாடும் விதமாக  படம் உருவாகி வருகிறது. மதுரை வட்டார வழக்குடன் , கிராமத்து இளைஞனாக  படத்தில் வலம் வருவாராம் சூர்யா. இந்த படத்தில் இடம்பெறும் மாடு பிடி காட்சிகளுக்காக சூர்யாவிற்கு சிறப்பு பயிற்சிகளும் கூட வழங்கப்பட்டுள்ளன. கலைப்புலி எஸ் தாணு  இந்த படத்தை தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.