தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் பாடல்கள் எழுதுவது அவ்வப்போது நடந்தது. சிம்பு ஒரு சில படங்களில் பாடல் எழுதினாலும் நடிகர் தனுஷ் ஒய் திஸ் கொல வெறி பாடல் எழுதி பட்டித்தொட்டியெங்கும் புகழப்பட்டார். அதனையடுத்து அவர் தொடர்ந்து பாடல்களை எழுதியும், பாடியும்வந்தார்.

Continues below advertisement

தனுஷால் அடையாளப்படுத்தப்பட்ட சிவகார்த்திகேயனும் தற்போது பாடல்கள் எழுத ஆரம்பித்திருக்கிறார். கோலமாவு கோகிலா படத்தில் கல்யாண வயசுதான் வந்துடுச்சு டி என்ற பாடலை முதல்முதலாக அவர் எழுதினார். 

அந்தப் பாடலுக்கு வந்த சம்பள தொகையை, தன்னுடைய முதல் படத்துக்கு பாடல் எழுதிய பாடலாசிரியர் நா. முத்துக்குமாருக்கு மரியாதை செய்யும் விதமாக முத்துக்குமாரின் குடும்பத்துக்கு அளித்தார்.

Continues below advertisement

தொடர்ந்து டாக்டர் படத்தில் இடம்பெற்ற செல்லம்மா செல்லம்மா என்ற பாடலை எழுதிய அவர் பீஸ்ட், எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்களிலும் பாடல்கள் எழுதுகிறார்.

இந்நிலையில்,  நடிகர் சதீஷ் நடிப்பில் ஏஜிஎஸ் தயாரிக்கும் நாய் சேகர் படத்திலும் சிவகார்த்திகேயன் பாடல் ஒன்றை எழுதுகிறார். இதனை நடிகர் சதீஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 

நாய் சேகர் படத்தில் ஹீரோயினாக ‘குக் வித் கோமாளி’ புகழ் பவித்ரா லக்‌ஷ்மி நடிக்கிறார். சமீபத்தின் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகி படப்பிடிப்பு தற்போது முடியும் தருவாயில் இருக்கிறது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் வாசிக்க: Vadivelu Next Movie: மாரிசெல்வராஜ் - உதயநிதியுடன் கூட்டணி சேரும் வைகை புயல் வடிவேலு..!

Annamalai on Tamil Cinema: மாநாடு சர்ச்சை.. தேவையற்ற விமர்சனம் வேண்டாம் - பாஜக அண்ணாமலையின் லேட்டஸ்ட் அறிக்கை!

SJ Suryah | நடிப்பில் மாஸ்.. வரிசைகட்டும் படங்கள்..! இனி எல்லாத்துலயும் எஸ்.ஜே.சூர்யா தான்.!