தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகராகவும், வளர்ந்து வரும் நடிகராகவும் வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இளம் கதாநாயகர்களிலே அதிகமான குடும்ப ரசிகர்களை கொண்ட நடிகர் என்ற பெருமையும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு உண்டு. மெரினா படம் மூலம் திரையுலகில் அறிமுகமான சிவகார்த்திகேயன் எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களின் வெற்றி மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார்.


அதேபோல, மின்னலே திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் கவுதம் வாசுதேவ் மேனன். காதல், ஆக்ஷன் என்று ஆங்கில பட பாணியில் எடுக்கப்படும் இவரது படங்களுக்கு என்று தமிழ்நாட்டில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஆங்கில வசனங்கள், நேர்த்தியான உடைகள், அருமையான பாடல் பதிவு போன்றவை கவுதம் மேனனின் தனித்துவமாக திகழ்கிறது. இவரது இயக்கத்தில் கடைசியாக தனுஷ் நடிப்பில் எனை நோக்கி பாயும் தோட்டா படம் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியானது.




அவரது இயக்கத்தில் துருவ நட்சத்திரம் மற்றும் ஜோஷ்வா படங்கள் ஏற்கனவே உருவாகி வருகின்றன. மேலும், நடிகர் சிம்பு புதிய தோற்றத்தில் நடிக்கும் வெந்து தணிந்தது காடு படமும் உருவாகி வருகிறது. இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை வேல்ஸ் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


சிவகார்த்திகேயன் தற்போது டான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்திற்கு பிறகு அட்லீயிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த அசோக் என்பவர் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படங்களுக்கான படப்பிடிப்பை முடித்த பிறகு கவுதம் மேனன் படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான், டாக்டர் படங்கள் வெளியீட்டிற்கு தயாராக உள்ளன.




கவுதம் மேனன் படங்களில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் அனைத்தும் எப்போதும் மிகவும் ஸ்டைலிஷாக உருவாக்கப்படும். கதாநாயகன், கதாநாயகி மட்டுமின்றி படத்தில் ஒரு காட்சிக்கு வருபவராக இருந்தாலும் அவரையும் மிகவும் ஸ்டைலிஷாக காட்டுவதே கவுதம் மேனன் படங்களின் சிறப்பு. இந்த நிலையில், காமெடி மூலம் குடும்பங்களின் நாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன், கவுதம் மேனன் இயக்கம் மூலம் ஸ்டைலிஷ் நாயகனாக விரைவில் திரையரங்குகளில் தோன்ற உள்ளார். இவர்களது கூட்டணி குறித்து ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 


புகழுக்கு மேல புகழ்... 6 மணிநேரத்துல 25 லட்சம் வாங்கினாரா புகழ்? இதுதான் நடந்துச்சு..