சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படம் டிரைலர் இன்று வெளியாக இருக்கிறது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள இப்படத்தை கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. சாய் பல்லவி நாயகியாக நடித்துள்ளார். ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். வரும் அக்டோபர் 31 ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது.
பார்க்கிங் பட இயக்குநருடன் இணையும் சிவகார்த்திகேயன்
அமரன் படத்திற்கு பின் சிவகார்த்திகேயன் ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் படத்தை தொடர இருக்கிறார். இதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு படத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூடிய விரைவில் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடிப்பார் என்றும் லோகேஷ் தெரிவித்துள்ளார்.
தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாவீரன் படத்தை தயாரித்த் சக்தி டாக்கீஸ் இந்த படத்தை தயாரிக்க இருக்கிறது. கடந்த ஆண்டு ஹரிஷ் கல்யாண் நடித்த பார்க்கிங் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக தடம் பதித்தவர் ராம்குமார் பாலகிருஷ்ணன். ஒரு கார் பார்கிங்கினால் இரு ஆண்களுக்கு இடையில் ஏற்படும் பிர்ச்சனையை ஒரு சிறப்பான ஃபேமிலி என்டர்டெயினராக சொல்லியிருந்தார். இந்த படம் இவருக்கும் தமிழ் மட்டுமில்லாமல் வெளிநாடு வரை அங்கீகாரத்தை ஏற்படுத்தி கொடுத்தது. பார்க்கிங் திரைப்படம் இந்தி உட்பட பல மொழிகளில் ரீமேக் ஆக இருக்கிறது. இப்படத்தின் இரண்டாம் பாகத்தை கூட ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து வருகிறார்கள்.
திறமையான இளம் இயக்குநர்களை தொடர்ந்து அடையாளம் கண்டு வருவது ஒரு நடிகருக்கு அவசியமான ஒன்று. அந்த வகையில் துப்பாக்கியை கையில் எடுத்த சிவகார்த்திகேயன் இளம் இயக்குநர்களின் படங்களை தயாரித்தும் அவர்களின் படங்களில் நடித்தும் வருவது அவருக்கு பல தரப்பினரிடம் இருந்து பாராட்டுக்களை பெற்று தந்துள்ளது.